காஷ்மீர் துப்பாக்கிச்சண்டையில் தீவிரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர் – தீவிர ரோந்து

 

காஷ்மீர் துப்பாக்கிச்சண்டையில் தீவிரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர் – தீவிர ரோந்து

பதுங்கியிருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிகளால் தாக்கியதில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் மரணமடைந்தார். பயங்கரவாதி ஒருவனும் கொல்லப்பட்டான். அதேபோன்று, சோபோர் மாவட்டத்தின் மல்மபன்போராவில் தொடர்ந்து நடைபெற்றுவரும் துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார், தீவிரவாதிகள் பக்கம் பலி ஒன்று.

காஷ்மீரில் கடந்த ஒரு வாரமாக திடீரென காட்சிகள் தீவிரமடைகின்றன. அமர்நாத் புனிதப்பயணம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கிடைத்த தகவல், அதனைத் தொடர்ந்து ராணுவத்தின் தீவிர கண்காணிப்பு என சற்றே கவலை உண்டாக்கும் நிலை அங்கே. இந்நிலையில், தெற்கு காஷ்மீரின் சோஃபியான் மாவட்டம், பந்தொஷன் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவல்கள் அடிப்படையில், பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
 

Jawan on alert

தேடுதல் வேட்டையை தடுக்கும்வகையில், பதுங்கியிருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிகளால் தாக்கியதில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் மரணமடைந்தார். பயங்கரவாதி ஒருவனும் கொல்லப்பட்டான். அதேபோன்று, சோபோர் மாவட்டத்தின் மல்மபன்போராவில் தொடர்ந்து நடைபெற்றுவரும் துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார், தீவிரவாதிகள் பக்கம் பலி ஒன்று. தேடுதல் வேட்டையில் பயங்கரவாதிகளிடமிருந்து அதிநவீன ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, இப்பகுதியில் ரோந்தில் இருந்த பாதுகாப்பு வாகனத்தின்மீது குண்டு வீசப்பட்டதில், வாகனம் சேதமடைந்தது. யாருக்கும் காயம் இல்லை. அப்பகுதியில் தொடர் பதற்றம் நிலவுகிறது.