காஷ்மீர் தலைவர்கள் கைது செய்யப்படவில்லை, வீட்டு விருந்தாளியாக உள்ளனர்- மத்திய அமைச்சர் தகவல்

 

காஷ்மீர் தலைவர்கள் கைது செய்யப்படவில்லை, வீட்டு விருந்தாளியாக உள்ளனர்- மத்திய அமைச்சர் தகவல்

காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் கைது செய்யப்படவில்லை அதற்கு பதிலாக வீட்டு விருந்தாளியாக வைக்கப்பட்டுள்ளனர் என பிரதமர் அலுவலக துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த மாதம் 5ம் தேதி நீக்கப்பட்டது. அதற்கு முந்தைய நாள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த மாநிலத்தின் அரசியல் தலைவர்கள், பிரிவினைவாதிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் காவலில் வைக்கப்பட்டனர். இன்று வரை அவர்கள் காவலிருந்து விடுவிக்கப்படவில்லை. இந்நிலையில் ஸ்ரீநகரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசுகையில் கூறியதாவது: 

காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள்

காஷ்மீர் அரசியல்வாதிகளை 18 மாதங்களுக்கு மேல் காவலில் வைக்க முடியாது. வி.ஐ.பி. பங்களாக்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் படம் பார்க்க ஹாலிவுட் சி.டி.க்கள், அவர்கள் விரும்பும ரொட்டி வழங்கப்படுகிறது. ஜிம் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வீட்டு காவலில் வைக்கப்படவில்லை. அவர்கள் வீட்டு விருந்தாளிகள்.

இயல்பு நிலைக்கு திரும்பும் காஷ்மீர்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு இந்தியாவுக்கு சொந்தமானது. மேலும் வடமாநிலத்தின் எல்லைகளை மீட்டெடுப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். ஜம்மு அண்டு காஷ்மீரில், அரசியல் தலைவர்கள், பிரிவினைவாதிகள் என  சுமார் 4000 பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகளை கூறுகின்றன. தற்போது காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி வருகிறது.