காஷ்மீர் குறித்த உங்கள் கருத்து அடுத்த 15 நாட்களில் மாறும்….. கவர்னர் சத்யபால் மாலிக் தகவல்..

 

காஷ்மீர் குறித்த உங்கள் கருத்து அடுத்த 15 நாட்களில் மாறும்….. கவர்னர் சத்யபால் மாலிக் தகவல்..

காஷ்மீர் குறித்த உங்கள் கருத்து அடுத்த 15 நாட்களில் மாறும் என அம்மாநில கவர்னர் சத்ய பால் மாலிக் தெரிவித்தார்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால் அங்கு எந்தவிதமான வன்முறைகள் நிகழாமல் இருக்க, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த வாரம் முதல் அங்கு பல பகுதிகளில் தொலைத்தொடர்பு இணைப்பு கொடுக்கப்பட்டது. இருப்பினும் பெரும்பாலான பகுதிகளில் தொலைதொடர்பு சேவை வழங்கப்படவில்லை. இதனால் கடந்த சில வாரங்களாக இந்தியாவின் மற்ற பகுதியிலிருந்து காஷ்மீர் துண்டிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் நிலவரம்

இந்நிலையில், நேற்று மறைந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக காஷ்மீர் கவர்னர் சத்ய பால் மாலிக்  டெல்லி வந்து இருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், எந்தவித உயிர் இழப்பும் ஏற்பட கூடாது என்பதே எங்களது அணுகுமுறை. 10 நாட்கள் தொலைத்தொடர்பு வசதி இல்லை என்றால், அது அப்படியே இருக்கும். ஆனால் விரைவில் கட்டுப்பாடுகளை தளர்த்துவோம். 

காஷ்மீர் நிலவரம்

இதுவரை எந்தவித உயிர் இழப்புகளும் ஏற்படவில்லை. இடை இடையே சில வன்முறை சம்பவங்கள் மட்டுமே நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீரில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகளுக்கு தட்டுபாடு இல்லை. உண்மையை சொன்னால், பக்ரீத் பண்டிகையின் போது இறைச்சி, காய்கறிகள் மற்றும் முட்டைகளை பொதுமக்களின் வீடுகளுக்கே கொண்டு டெலிவரி செய்தோம். உங்களது கருத்து அடுத்த 15 நாட்களில் மாறும் என கூறினார்.