காஷ்மீர்: ஐந்து தலைவர்களை வீட்டுக் காவலிலிருந்து விடுவித்த அரசு!

காஷ்மீர்: ஐந்து தலைவர்களை வீட்டுக் காவலிலிருந்து விடுவித்த அரசு!

கடந்த ஆகஸ்ட் மாதம் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கும் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வரும்போது கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டவர்களில் ஐந்து பேரை தற்போது விடுதலை செய்துள்ளது காஷ்மீர் அரசு.

கடந்த ஆகஸ்ட் மாதம் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப் பிரிவை நீக்கி, காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்தது மத்திய அரசு. அப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா, முன்னாள் முதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். சில வாரங்களுக்கு முன்பு கூட ஃபருக் அப்துல்லாவின் வீட்டுக்காவலை நீட்டித்து அரசு உத்தரவிட்டது.

ishfaq jabbar

இந்தநிலையில், காஷ்மீர் அரசியலில் முக்கியத் தலைவர்களான தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த இஷ்ஃபாக் ஜாபர், குலாம் நபி பட், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஷீர் மீர், மெகபூபா முப்தியின் பிடிபி கட்சியைச் சேர்ந்த ஸாகூர் மீர், யாஷீர் ரேஷி ஆகியோரின் வீட்டுக் காவல் விலக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 25ம் தேதி இரண்டு தலைவர்களின் வீட்டுக்காவலை யூனியன் பிரதேச நிர்வாகம் விலக்கிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.