காஷ்மீர் இப்பம் பரவாயில்லை! ஹரியத் குழு கூட பேச்சுவார்த்தைக்கு தயாரா இருக்காங்கன்னு பாருங்களேன்! சத்ய பால் மாலிக் தகவல்….

 

காஷ்மீர் இப்பம் பரவாயில்லை! ஹரியத் குழு கூட பேச்சுவார்த்தைக்கு தயாரா இருக்காங்கன்னு பாருங்களேன்! சத்ய பால் மாலிக் தகவல்….

காஷ்மீர் நிலவரம் தற்போது பரவாயில்லை. ஹரியத் குழு கூட பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்காங்க என்று அம்மாநில கவர்னர் சத்ய பால் மாலிக் கூறினார்.

இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் காஷ்மீர் பிரச்சினையும் நமக்கு தீரா தலைவலியாக இருந்து வருகிறது. பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு காஷ்மீர் மக்களை தூண்டி விட்டு வன்முறை சம்பவங்களை அரங்கேற்றி வருகிறது. மத்திய அரசு அந்த மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனாலும் அங்கு முழுமையாக அமைதியை ஏற்படுத்தவில்லை.

காஷ்மீர்

தற்போது காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஸ்ரீநகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில கவர்னர் சத்ய பால் மாலிக், மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ஜித்தேந்திர சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

அப்போது சத்ய பால் மாலிக் பேசுகையில், நான் இங்கு வந்த போது இருந்த சூழ்நிலையை காட்டிலும் தற்போது காஷ்மீர் நிலவரம் முன்னேற்றம் கண்டுள்ளது. ஹரியத் பார்த்தாலே தெரியும். ராம் விலாஸ் பஸ்வான் அவர்களது கதவு பக்கம் நின்ற போது அவர்கள் திறக்கவில்லை. ஆனால் இப்போது அவர்கள் பேச தயாராக இருக்காங்க. ஆகையால் வித்தியாசம் தெளிவாக தெரிகிறது. வெள்ளிக்கிழமை தொழுகை நேரத்தில் நடக்கும் பிரச்சினைகள் தடுக்கப்பட்டுள்ளது என கூறினார்.

காஷ்மீர்

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை, நாடாளுமன்ற தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடக்கும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் மாதம் அறிவித்து இருந்தது. இந்நிலையில் அம்மாநிலத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு கிரீன் சிக்னல் கொடுத்துள்ளது. இதனையடுத்து அந்த மாநிலத்துக்கான தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம்  விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.