காஷ்மீரை பிரச்சினைக்குரிய இடமாக கூகுள் வரைபடம் காட்டுவதால் சர்ச்சை

 

காஷ்மீரை பிரச்சினைக்குரிய இடமாக கூகுள் வரைபடம் காட்டுவதால் சர்ச்சை

இந்தியாவுக்கு வெளியே இருந்து கூகுள் மேப்ஸ் வசதியை பயன்படுத்தும்போது காஷ்மீரை பிரச்சினைக்குரிய இடமாக கூகுள் வரைபடம் காட்டுகிறது.

வாஷிங்டன்: இந்தியாவுக்கு வெளியே இருந்து கூகுள் மேப்ஸ் வசதியை பயன்படுத்தும்போது காஷ்மீரை பிரச்சினைக்குரிய இடமாக கூகுள் வரைபடம் காட்டுகிறது.

கூகுள் மேப்ஸ் சேவை பல வகைகளில் பயனர்களுக்கு உதவி செய்கிறது. முன்பின் தெரியாத இடத்திற்கு கூட கூகுள் மேப்ஸ் உதவியுடன் அங்கு செல்ல முடியும். ஆனால், கூகுள் மேப்ஸ் சில சமயங்களில் தவறான வழிகளையும் காண்பிக்கிறது என சில பயனர்கள் புகார் கூறி வருகின்றனர். அதனால் கூகுள் மேப்ஸ் சேவையின் துல்லியத் தன்மை மீது சந்தேகம் எழுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் மற்றொரு நிகழ்வு நடந்துள்ளது. இந்தியாவுக்கு உள்ளே இருந்து கூகுள் மேப்ஸ் வரைபடத்தை பார்க்கும்போது காஷ்மீர் பகுதி இந்தியாவுடன் இணைந்து முழுமையாக காட்டப்படுகிறது.

ttn

ஆனால் பாகிஸ்தானில் இருந்து கொண்டு கூகுள் மேப்ஸில் இந்திய வரைபடத்தை பார்க்கும்போது காஷ்மீர் சர்ச்சைக்குரிய இடமாக காண்பிக்கப்படுகிறது. இந்த செய்தியை அமெரிக்காவின் ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை வெளியிட்டு இருக்கிறது. உள்ளூர் பிரதேசத்துக்கு ஏற்ப மொழிபெயர்க்கப்பட்ட வரைபட தயாரிப்புகள், உள்ளூர் சட்டங்களுக்கு ஏற்றபடி அந்த நாட்டின் நிலையை எடுத்துக் காட்டுகின்றன என்று இந்த விவகாரம் தொடர்பாக கூகுள் இணையதள நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.