காஷ்மீரை கொள்ளையடித்த அரசியல் குடும்பங்களை போட்டு தள்ளுங்கப்பா! அரசியல்வாதிகளை கதிகலங்க வைத்த கவர்னர்….

 

காஷ்மீரை கொள்ளையடித்த அரசியல் குடும்பங்களை போட்டு தள்ளுங்கப்பா! அரசியல்வாதிகளை கதிகலங்க வைத்த கவர்னர்….

பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளால் காஷ்மீர் மாநிலத்தில் எப்போதும் துப்பாக்கி சத்தம் கேட்டு கொண்டுதான் இருக்கும். ஆனால் சமீபகாலமாக பாதுகாப்பு படையின் உறுதியான நடவடிக்கைகள் மற்றும் அங்குள்ள மக்களின் மனநிலை மாற்றம் போன்றவற்றால் தற்போது அங்கு துப்பாக்கி சத்தம் மற்றும் வன்முறைகள் குறைந்துள்ளது.

govrernor

காஷ்மீரில் தற்போது குடியரசு தலைவர் ஆட்சி அமலில் உள்ளது. அம்மாநில கவர்னர் சத்யபால் மாலிக் குடியரசு தலைவர் ஆட்சியை செயல்படுத்தி வருகிறார். கார்கில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கவர்னர் சத்யபால் மாலிக் பேசுகையில் கூறியதாவது: துப்பாக்கியை கையில் எடுத்துள்ள இளைஞர்கள் தங்களது மக்கள், பாதுகாப்பு படை அதிகாரிகள், சிறப்பு போலீஸ் அதிகாரிகளை கொல்கிறார்கள். நீங்கள் ஏன் அவர்களை கொல்கிறீர்கள்?

attack

காஷ்மீர் வளத்தை கொள்ளையடித்தவர்களை கொல்லுங்கள். அப்படிப்பட்ட யாரையும் நீங்கள் கொலை செய்தீர்களா? காஷ்மீரை ஆண்ட அரசியல் குடும்பங்கள் அரசு பணத்தை கொள்ளையடித்து உலக முழுவதும் சொத்துக்களை குவித்துள்ளனர். காஷ்மீரை ஆண்ட குடும்பங்கள் ஏராளமான சொத்துக்களை வைத்து இருக்கின்றனர். அவர்களுக்கு ஸ்ரீநகரில் ஒன்று, டெல்லி, துபாய் மற்றும் லண்டன் என எல்லா இடத்திலும் அவர்களுக்கு ஒரு வீடு உள்ளது. மேலும் பெரிய ஹோட்டல்களிலும் பங்குதாரர்களாக உள்ளனர். ஊழல் குறித்து குறிப்பிடுகையில், இநான் இருந்தால் அவர்களை சிறையில் அடைத்து இருப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

சத்யபால் மாலிக் பேசுகையில், துப்பாக்கிக்கு இந்திய அரசு என்றும் அடி பணியாது என்று தீவிரவாதிகளுக்கு கவர்னர் சத்யபால் மாலிக் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.