காஷ்மீருக்கு செல்போன் சேவைகள் வழங்கப்படும் : காஷ்மீர் முதன்மை செயலாளர் அறிவிப்பு..!

 

காஷ்மீருக்கு செல்போன் சேவைகள் வழங்கப்படும் : காஷ்மீர் முதன்மை செயலாளர் அறிவிப்பு..!

போராட்டங்களைத் தடுப்பதற்காக, ஆயிரக் கணக்கான போலீசார் அப்பகுதிகளில் குவிக்கப்பட்டு  தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீருக்குப் பல காலமாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தைத் தடை செய்து ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து மத்திய அரசு உத்தரவிட்டது.  இதனை எதிர்த்து ஜம்மு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டங்களைத் தடுப்பதற்காக, ஆயிரக் கணக்கான போலீசார் அப்பகுதிகளில் குவிக்கப்பட்டு  தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதனையடுத்து, ஊரடங்கு உத்தரவும்  பிறப்பிக்கப்பட்டது. 

Kashmir

தகவல் தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அனைத்து சேவைகளும் துண்டிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியும், இன்னும் தகவல் தொடர்பு சேவைகள் வழங்கப் படவில்லை. இன்னும் அப்பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு மக்களைக் கண்காணித்து வண்ணமே உள்ளனர். இந்நிலையில், வரும் அக்டோபர் 14 ஆம் தேதி முதல் காஷ்மீரின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்போன் சேவைகள் வழங்கப்படும் என்று காஷ்மீர் மாநிலத்தின் முதன்மை செயலாளர் ரோகித் கன்சல் அறிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன. 

Kashmir