காஷ்மீருக்குள் ஊடுருவ காத்திருக்கும் 250 தீவிரவாதிகள்…..ராணுவ தளபதி அதிர்ச்சி தகவல்

 

காஷ்மீருக்குள் ஊடுருவ காத்திருக்கும் 250 தீவிரவாதிகள்…..ராணுவ தளபதி அதிர்ச்சி தகவல்

ஜம்மு அண்டு காஷ்மீருக்குள் ஊடுருவ பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் 250 பேர் காத்திருக்கின்றனர். தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகளை தினந்தோறும் முடியறித்து வருகிறோம் என ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நராவனே தெரிவித்தார்.

கடந்த மாதம் 31ம் தேதியன்று நம் நாட்டின் புதிய ராணுவ தளபதியாக மனோஜ் முகுந்த் நராவனே பதவியேற்றார். ராணுவ தளபதியாக பதவியேற்ற பிறகு முதல் வெளிபயணமாக அடுத்த வாரம் சியாச்சின் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ராணுவ தளபதி மனோஜ் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தீவிரவாதிகள்

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கிய பிறகு அங்கு அமைதி திரும்பி வருகிறது. ஆனால் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தினந்தோறும் ஊடுருவ முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். தீவிரவாத நடவடிக்கைகள் மற்றும் கல் எறி சம்பவங்கள் வெகுவாக குறைந்து விட்டது. சட்டம் ஒழுங்கு நடவடிக்கை முன்னேற்றம் கண்டுள்ளது மற்றும் மேலும் முன்னேற்றம் காணும் என எதிர்பார்க்கிறோம். ஜம்மு அண்டு காஷ்மீருக்குள் ஊடுருவ 200 முதல் 250 தீவிரவாதிகள் காத்திருக்கின்றனர். தினந்தோறும் அவர்களின் ஊடுருவல்  முயற்சிகள் முறியடிக்கப்படுகிறது.

பாலகோட் விமான தாக்குதல்

2016 செப்டம்பரில் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதிகள் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் மற்றும் 2018ல் பாலகோட் தீவிரவாத முகாம்கள் மீதான தாக்குதல் வாயிலாக, தீவிரவாத உள்கட்டமைப்பை இந்தியாவில் அழிக்க முடியும் மற்றும் நீங்கள் கேட்பாறின்றி செயல்பட முடியாது என்று  நமது அண்டை நாட்டுக்கு (பாகிஸ்தான்) கடுமையான செய்தியை அனுப்பியுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.