காஷ்மீருக்கான சிறப்பு சட்டப்பிரிவை உருவாக்க அன்றே மறுத்த சட்ட அமைச்சர் அம்பேத்கர்….

 

காஷ்மீருக்கான சிறப்பு சட்டப்பிரிவை உருவாக்க அன்றே மறுத்த சட்ட அமைச்சர் அம்பேத்கர்….

காஷ்மீருக்காக சிறப்பு சட்டப்பிரிவு இயற்றுவது இந்தியாவின் நலனுக்கு எதிரானது. அதனை நான் ஒரு போதும் செய்ய மாட்டேன் என அப்போது சட்ட அமைச்சராக இருந்த பி.ஆர். அம்பேத்கர் கூறினார்.

காஷ்மீருக்கான சிறப்பு சட்டப்பிரிவை உருவாக்க அன்றே மறுத்த சட்ட அமைச்சர் அம்பேத்கர்….

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. அப்போது காஷ்மீர் மன்னராக இருந்த ஹரிசிங் இந்தியாவுடன் இணைக்க பல்வேறு நிபந்தனைகளை விதித்தார். அதேசமயம் பாகிஸ்தான் காஷ்மீரை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்று துடித்து கொண்டிருந்தது. அதனால் இந்திய தலைவர்கள் காஷ்மீருக்காக இந்திய அரசியலமைப்பில் சிறப்பு சட்டபிரிவை உருவாக்க ஒப்புக்கொண்டார்கள்.

நேரு

சிறப்பு சட்டப்பிரிவு இயற்றுவது தொடர்பாக இந்தியாவுடன் பேசுவதற்காக மன்னர் ஹரிசிங், மூத்த அரசியல் தலைவர் ஷேக் அப்துல்லா உள்பட 3 பேரை நியமனம் செய்தார். இதனையடுத்து சிறப்பு சட்ட பிரிவு வரையறப்பது தொடர்பாகப அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும்படி இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக இருந்த பி.ஆர். அம்பேத்கரை பிரதமர் நேரு வலியுறுத்தினார். ஆனால் அதற்கு அம்பேத்கர் மறுத்து விட்டதாக வரலாறு கூறுகிறது.

ஷேக் அப்துல்லா

 
அம்பேத்கர் மறுத்து விட்டதால் வேறு தலைவர்கள் காஷ்மீர் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி  கொண்டுவரப்பட்டதுதான் சிறப்பு சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ. அதேசமயம், சிறப்பு சட்டப்பிரிவு தொடர்பாக காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர்களான ஓமர் அப்துல்லாவின் தாத்தாவும், பரூக் அப்துல்லாவின் அப்பாவுமான ஷேக் அப்துல்லாவுக்கு அம்பேத்கர் சரியான பதிலடி கொடுத்த தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

பி.ஆர். அம்பேத்கர் ஷேக் அப்துல்லாவிடம் கூறியதாவது: உங்கள் எல்லையை இந்தியா பாதுகாக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். இந்தியா உங்க பகுதிக்கு சாலைகள் போட வேண்டும், உணவு மற்றும் தானியங்கள் சப்ளை செய்ய வேண்டும். மேலும் காஷ்மீருக்கு இந்தியாவுக்கு இணையான உரிமை வேண்டும். ஆனால் இந்திய அரசுக்கு குறைந்தபட்ச அதிகாரங்கள் மற்றும் இந்திய மக்களுக்கு காஷ்மீரில் எந்த உரிமையும் கிடையாது என்ற உங்களது முன்மொழிவுக்கு சம்மதம் கொடுக்க வேண்டும் என்கிறீர்கள். இது துரோக சிந்தனையாகும். மேலும் இது இந்தியாவின் நலனுக்கு எதிரானது. இந்தியாவின் சட்ட அமைச்சராகிய நான் இதனை ஒருபோதும் செய்ய மாட்டேன். என மண்டையில் உரைக்கும் படி பதிலடி கொடுத்தார்.