காஷ்மீரில் தொடரும் பதற்றம்: வெளியூர் பத்திரிகையாளர்கள் காஷ்மீருக்கு வர தடை!

 

காஷ்மீரில் தொடரும் பதற்றம்: வெளியூர் பத்திரிகையாளர்கள் காஷ்மீருக்கு வர தடை!

காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையில் கலவரத்தை ஏற்படுத்தப் பயங்கர வாதிகள் திட்டமிட்டுருப்பதாகக் உளவுத்துறை எச்சரித்துள்ளது.

காஷ்மீரில் தொடரும் பதற்றம்: வெளியூர் பத்திரிகையாளர்கள் காஷ்மீருக்கு வர தடை!

புதுடெல்லி:  வெளியூர் பத்திரிகையாளர்கள் காஷ்மீருக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையில் கலவரத்தை ஏற்படுத்தப் பயங்கர வாதிகள் திட்டமிட்டுருப்பதாகக் உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனால் கூடுதல் படைகள் காஷ்மீரில் குவிக்கப்பட்டு வருகிறது. இதனால் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுமா? அல்லது மாநிலம் மூன்றாக பிரிக்கப்படுமா?என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் அங்கு இணையச் சேவை முடக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி உள்ளிட்ட தலைவர்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவோடு இரவாக காங்கிரஸ் தலைவர் உஸ்மான் மஜித் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்தத் தலைவர் தரிகாமி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.இதனால் அங்கு பரபரப்பான சூழல் காணப்படுகிறது. 

 

இதன் காரணமாகப் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் மோடி இன்று காலை ஆலோசனை நடத்தினார். இதில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

இதையடுத்து மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு காரணங்கள் கருதி  உள்ளூர் பத்திரிகையாளர்களைத் தவிர வெளியிலிருந்து வரும் பத்திரிகையாளர்கள் காஷ்மீருக்கு வருவதைத் தவிர்க்கும் படி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது