காஷ்மீரில் காலை நேரத்தில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை- அரசு தகவல்…

 

காஷ்மீரில் காலை நேரத்தில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை- அரசு தகவல்…

காஷ்மீரில் 90 சதவீத பகுதிகளில் காலை நேரத்தில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை.தற்போது அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது என அரசு அதிகாரி தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரின் திட்ட கமிஷன் முதன்மை செயலர் ரோகித் கன்சால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: காஷ்மீரில் அத்தியாவசிய பொருட்கள் சப்ளை உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து முக்கிய மருத்துவமனைகள் மற்றும் மருத்தவ பராமரிப்பு சேவைகள் அனைத்தும் இயல்பாக செயல்படுகிறது. ஜம்மு பகுதியில் உள்ள 10 மாவட்டங்களிலும் மொபைல் இணைப்பு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

ரோகித் கன்சால்

காஷ்மீரில் உள்ள 111 காவல் நிலையங்களில் 92 காவல் நிலையங்கள் இருக்கும் பகுதிகளில் பகல் நேரத்தில் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் காஷ்மீரின் 90 சதவீத பகுதிகள் காலை நேரத்தில் எந்தவொரு கட்டுப்பாடுகளும் இன்றி சுதந்திரமான உள்ளன. ஜம்மு மற்றும் லடாக்கில் எந்தவொரு கட்டுப்பாடுகளும் இல்லாமல் தொடர்ந்து சுதந்திரமாக உள்ளன.

கடந்த மாதம் 5ம் தேதி முதல் காஷ்மீரில் 152 வன்முறை சம்பவங்கள் நடந்ததாக அறிக்கைகள் கூறுகின்றன. இதில் 125 சம்பவங்கள் ஸ்ரீநகரில் நடைபெற்றது. ஆக மற்ற 9 மாவட்டங்களில் பெரிய வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்பதை இது வெளிப்படுத்துகிறது.

காஷ்மீர்

அரசு அலுவலகங்கள் முழுமையாக செயல்படுகின்றன. பணியாளர்கள் வருகையும் நன்றாக உள்ளது. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதுடன், மாணவர்கள் வருகையும் முன்னேற்றம் கண்டுள்ளது. சில தேச விரோத அமைப்புகளால் சந்தைகள் தொடர்ந்து  மூடப்பட்டுள்ளதை அரசாங்கள் சரியாக அறிந்திருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.