காஷ்மீரில் இயல்பு நிலை நிலவவில்லை!  உண்மையை போட்டுடைத்த ராகுல்காந்தி!!

 

காஷ்மீரில் இயல்பு நிலை நிலவவில்லை!  உண்மையை போட்டுடைத்த ராகுல்காந்தி!!

சில நாட்களுக்கு முன் காஷ்மீர் ஆளுநர் அழைப்பு விடுத்ததன் பேரில் அங்குள்ள நிலைமையை அறியச் சென்றேன். ஆளுநர் அழைப்பின் பெயரிலேயே காஷ்மீர் சென்றோம்.

ஜம்மு காஷ்மீர் நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக, ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று ஸ்ரீநகருக்கு புறப்பட்டு சென்றனர். இதற்கிடையே, அரசியல் கட்சி தலைவர்கள் யாரும் வரவேண்டாம் என, ஜம்மு-காஷ்மீர் அரசு தெரிவித்து அவர்களை திருப்பி அனுப்பியது. காஷ்மீருக்குச் செல்ல முயன்ற ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பலர் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல்காந்தி, “காஷ்மீர் நிலவரத்தை அறியச்சென்ற போது விமான நிலையத்தை தாண்டிச்செல்ல அனுமதிக்கப்படவில்லை. சில நாட்களுக்கு முன் காஷ்மீர் ஆளுநர் அழைப்பு விடுத்ததன் பேரில் அங்குள்ள நிலைமையை அறியச் சென்றேன். ஆளுநர் அழைப்பின் பெயரிலேயே காஷ்மீர் சென்றோம்.

காஷ்மீரில் நிலவும் நிலையை பார்ப்பதற்காக ஸ்ரீநகர் சென்றோம், துரதிருஷ்டவசமாக எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. நாங்கள் அழைத்துச்சென்ற ஊடக நண்பர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இவையெல்லாம் பார்க்கும் போது காஷ்மீரில் சகஜ நிலை இல்லை என்பது தெளிவாகிறது” என்று கூறினார்.