காஷ்மீரில் இப்பம் 250 பேர் தான் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்- ராம் மாதவ் தகவல்

 

காஷ்மீரில் இப்பம் 250 பேர் தான் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்- ராம் மாதவ் தகவல்

காஷ்மீரில் முதலில் 2,500 பேர் வரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டு இருந்தனர். ஆனால் தற்போது 250 பேர் மட்டுமே தடுப்பு காவலில் உள்ளனர் என பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் ராம் மாதவ் தகவல் தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் 5ம் தேதியன்று காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்த்தை மத்திய அரசு நீக்கியது. இதனையொட்டி முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அம்மாநில முன்னாள் முதல்வர்கள், அரசியல் தலைவர்கள், பிரிவினைவாதிகள் என பல ஆயிரம் காவலில் வைக்கப்பட்டனர். மேலும் தொலைத்தொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்டது, பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது காஷ்மீர் மாநிலம் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியுள்ளது. லேண்ட் லைன் இணைப்புகள் அங்கு முழுமையாக செயல்பட்டு வருகின்றன.

காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள்

அதேசமயம் காவலில் எத்தனை பேர் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த சரியான தகவல்கள் எதுவும் வெளிவராமல் இருந்து வந்தது. இந்நிலையில் பா.ஜ.க.வின் தேசிய பொதுசெயலாளர் ராம் மாதவ் தற்போது காஷ்மீரில் தற்போது 250 பேர் மட்டுமே காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்கபாத்தில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராம் மாதவ் பேசுகையில் கூறியதாவது: 

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபோது சுமார் 2,000-2,500 பேர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர். தற்போது 200-250 பேர் வரை மட்டுமே தடுப்பு காவலில் உள்ளனர். சில பேர்  5 ஸ்டார் கெஸ்ட் ஹவுஸ்களிலும் மற்றும் சிலர் 5 ஸ்டார் ஹோட்டல்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மரியாதையாக நடத்தப்படுகின்றனர். கடந்த 2 மாதங்களாக காஷ்மீரில் அமைதி நிலவுகிறது.

காஷ்மீர்

காஷ்மீர் மக்களுக்கு என்ன தேவை என்பதையும், தடுப்பு காவலில் உள்ள இந்த 250 பேரின் தேவை என்ன  என்பதையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். காஷ்மீரை பொறுத்தவரை இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உள்ள ஒரே பிரச்னை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நிலைதான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.