காஷ்மீரில் இன அழிப்பு புகார் கூறிய இம்ரானுக்கு சு.சுவாமி பதில்!

 

காஷ்மீரில் இன அழிப்பு புகார் கூறிய இம்ரானுக்கு சு.சுவாமி பதில்!

இனவழிப்பு சர்வதேச பிரச்னை என்றால், 1989-90களில் காஷ்மீர் பண்டிட்களுக்கும், சீக்கியர்களுக்கும் நடந்ததை ஏன் அப்படி சொல்லவில்லை? ப்ளேபாய் இம்ரான் அவர்களே, போய் வரலாற்றை படியுங்கள், இல்லையென்றால் நீங்கள் மேயவிட்டிருந்த உங்கள் கோழிகள் பஞ்சாரத்தை தேடிவந்துவிடும்.

காஷ்மீரில் இனவழிப்பு நடவடிக்கைகளை இந்தியா தொடர்வதாகவும், சர்வதேச சமூகம் ஏன் இன்னும் அமைதியாக இருக்கிறது என புரியவில்லை எனவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வீடியோ வெளியிட்டு புலம்பி தள்ளியிருந்தார். இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்றும் இம்ரான் எச்சரித்திருந்தார். இம்ரானுக்கு ட்விட்டரில் பதில் அளித்துள்ளார் பாஜக எம்.பி. சுப்ரமணியன் சுவாமி.

Subramanian Swamy

”இனவழிப்பு சர்வதேச பிரச்னை என்றால், 1989-90களில் காஷ்மீர் பண்டிட்களுக்கும், சீக்கியர்களுக்கும் நடந்ததை ஏன் அப்படி சொல்லவில்லை? ப்ளேபாய் இம்ரான் அவர்களே, போய் வரலாற்றை படியுங்கள், இல்லையென்றால் நீங்கள் மேயவிட்டிருந்த உங்கள் கோழிகள் பஞ்சாரத்தை தேடிவந்துவிடும்” என்றிருக்கிறார். ஆங்கிலத்தில் சுப்ரமணியன் சுவாமி சொன்னதை தமிழில் மொழிபெயர்த்தால் இப்படித்தான் ஓரளவுக்கு பண்ணமுடிகிறது. கடைசி வரிக்கு என்ன அர்த்தம்னுதான் புரியல!