காஷ்மீரில் அரசியல் வெற்றிடத்தை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

 

காஷ்மீரில் அரசியல் வெற்றிடத்தை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

காஷ்மீரில் அரசியல் வெற்றிடத்தை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி செய்கிறது. அந்த வெற்றிடம் தீவிரவாதிகளால் நிரப்பப்படும் என மத்திய அரசுக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளதை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக கண்டித்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி டிவிட்டரில், பரூக் அப்துல்லா போன்ற தேசிய தலைவர்களை நீக்குவதன் மூலம் ஜம்மு அண்டு காஷ்மீரில் அரசியல் வெற்றிடத்தை உருவாக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது.

பரூக் அப்துல்லா
அந்த வெற்றிடம் தீவிரவாதிகளால் நிரப்பப்படும். அப்புறம் இந்தியாவின் பிற பகுதிகளை துருவப்படுத்த காஷ்மீரை நிரந்தரமாக ஒரு அரசியல் கருவியாக பயன்படுத்தலாம். ஜம்மு அண்டு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு இடத்தை உருவாக்குவதை மத்திய அரசு கட்டாயம் நிறுத்த வேண்டும் மற்றும் அனைத்து தேசிய தலைவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என பதிவு செய்து இருந்தார்.

உச்ச நீதிமன்றம்

கடந்த திங்கட்கிழமையன்று, உச்ச நீதிமன்றம் ஜம்மு அண்டு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேசமயம் அந்த பள்ளத்தாக்கு பகுதியில் தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.