காவி நிற ஜெர்சியில் களமிறங்க காத்திருக்கும் இந்திய அணி !!

காவி நிற ஜெர்சியில் களமிறங்க காத்திருக்கும் இந்திய அணி !!

நடப்புக் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில்  வரும் 30ம் தேதி நடைபெற இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி ஆரஞ்சு நிற ஜெர்சியில் விளையாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நடப்புக் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில்  வரும் 30ம் தேதி நடைபெற இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி ஆரஞ்சு நிற ஜெர்சியில் விளையாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

india

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. 
இந்த தொடரில் தொடர்ந்து வெற்றியை மட்டுமே சந்தித்து வரும் இந்திய படை, நாளை நடைபெறும் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியையும், 30ம் தேதி நடைபெறும் போட்டியில் இங்கிலாந்தையும் எதிர்கொள்ள உள்ளது. 
இந்த நிலையில், 30ம் தேதி நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய அணி வீரர்கள் தங்களது வழமையான நீல நிற ஜெர்சிக்கு பதிலாக ஆரஞ்சு நிற ஜெர்சியுடன் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

india

ஐ.சி.சி.,யின் சில விதிமுறைகள் படியே இந்திய அணி ஆரஞ்சு நிர ஜெர்சியை அணிய உள்ளதாக கூறப்பட்டாலும், இதுவரை மொத்தம் 24 முறை இந்திய அணியின் ஜெர்சியை நீல நிறத்திலேயே மாற்றியமைத்த பி.சி.சி.ஐ., இந்த முறை மட்டும் ஏன் ஆரஞ்சு நிறத்திற்கு மாற்றுகிறது என்ற கேள்வியை சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 
அதே வேளையில் மறுபுறம் வலதுசாரி சிந்தனை கொண்ட கிரிக்கெட் ரசிகர்கள் இனி கிரிக்கெட்டிலும் காவி தான் என்ற வகையில் இந்திய அணியின் புதிய ஜெர்சியை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.