“காவி நிறம்; மாட்டு கோமியம்” : சென்சாரில் கட் ஆன ஜிப்ஸியின் ஸ்னீக் பீக்!

 

“காவி நிறம்; மாட்டு கோமியம்” : சென்சாரில் கட் ஆன ஜிப்ஸியின் ஸ்னீக் பீக்!

தேசிய அளவில் சர்ச்சைக்குரிய பல பிரச்சினைகளை  கொண்டுள்ள  நிகழ்கால அரசியலை  தோலுரித்து காட்டியுள்ளார்.

குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்களுக்குப் பிறகு நடிகர் ஜீவா நடிப்பில் ராஜூமுருகன் இயக்கியிருக்கும்  திரைப்படம் ‘ஜிப்ஸி’. ஜீவா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் நடாஷா சிங் நாயகியாக நடித்துள்ளார்.ஜோக்கர் படத்தில் ‘என்னங்க சார் உங்க சட்டம்’ என்று கேட்டு மத்திய, மாநில  அரசுகளை திக்குமுக்காடச் செய்தார் ராஜு முருகன் .

ttn

மதவெறி, சாதிவெறி, பதவி வெறிகளை ஆட்டம் காண வைக்கும் வகையில், அடுத்த படமான ஜிப்ஸியிலும் பல விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தேசிய அளவில் சர்ச்சைக்குரிய பல பிரச்சினைகளை  கொண்டுள்ள  நிகழ்கால அரசியலை  தோலுரித்து காட்டியுள்ளார்.

ttn

இந்நிலையில் சமீபத்தில் வெளியான  இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  ஏற்கனவே இந்த படத்திலிருந்து நீக்கப்பட்ட சில காட்சிகள் படம் வெளியாவதற்கு முன்பே படக்குழுவால் வெளியிடப்பட்டது. 

தற்போது படம் வெளியான பிறகும் ஸ்னீக் பீக் ஒன்றை தற்போது Moviebuff நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் காவி  நிறம் அணிந்த ஒருவர் பசுமாட்டின் கோமியத்தை தலையில் தடவி கொண்டும், பின்னணி குரலில் இந்து முஸ்லீம் கலவரத்தை திட்டமிட்டு நடத்தி வைத்தது காவி நிறம் அணிந்த முதல்வரும் தான் என்பது போல அந்த காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த காட்சியை கதாபாத்திரத்தின் பெயர், உடையின் நிறம், வசனம் ஆகியவற்றை காரணம் காட்டி தணிக்கை குழு நீக்கியதாகப் படக்குழு அறிவித்துள்ளது.