காவி நிறத்திற்கு மாறிய இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்ஸி!

 

காவி நிறத்திற்கு மாறிய இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்ஸி!

உலகக்கோப்பை போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணி ஆரஞ்சு நிறத்திலான புதிய ஜெர்ஸியை அணிந்து விளையாடவுள்ளனர். 

உலகக்கோப்பை போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணி ஆரஞ்சு நிறத்திலான புதிய ஜெர்ஸியை அணிந்து விளையாடவுள்ளனர். 

நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 9 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. இந்தத் தொடரில் இந்தியா விளையாடிய 6 போட்டிகளில் 5 வெற்றி, ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. நடப்பு உலகக்கோப்பை தொடரில் நிறைய அணிகள் நீல நிற உடை அணிந்து விளையாடி வருகின்றனர். எனவே ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி புதிய ஆரஞ்சு நிறத்திலான ஜெர்ஸியை அணிந்து விளையாடுவார்கள் எனக் கூறப்பட்டது. இதுதொடர்பாக பிசிசி அதிகாரப்பூர்வ சில சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.  ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா அணி வழக்கமான நீல நிற உடையிலே விளையாடியது. 



வழக்கமாக உலகக்கோப்பை தொடரின்போது இந்திய அணிக்கு நீல நிற ஜெர்ஸி வழங்கப்படுவது வழக்கம். ஆனால் தற்போது ஆரஞ்சு நிறம் கொண்ட ஜெர்ஸியை வடிவமைத்து பிசிசிஐ வெளியிட்டுள்ளது. புதிதாக வெளியிட்டுள்ள இந்த ஜெர்ஸியின் முன்புறம் மட்டும் நீலம் கலந்தும், பின் புறம், பெயர் மற்றும் எண் நீல நிறத்தில் பொறிக்கப்பட்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் விளையாட்டு வீரர்களின் உடையையும் பாஜக காவி நிறத்திற்கு மாற்றியதா என பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்படுகிறது. 

இத்தகைய விமர்சனங்கள் எழுந்ததையடுத்து பிசிசிஐ, இந்தியாவின் தேசிய கொடியிலிருக்கும் ஆரஞ்சு நிறத்தை மையப்படுத்தியே இந்த வண்ணத்தில் ஜெர்ஸி உருவாக்கப்பட்டுள்ளது. இதனை அரசியலாக்க வேண்டாம் என பதிலளித்துள்ளது.