காவி சாயத்திற்குள் நானும் வள்ளுவரும் சிக்க மாட்டோம்: ரஜினிகாந்த் அதிரடி!

 

காவி சாயத்திற்குள் நானும் வள்ளுவரும் சிக்க மாட்டோம்: ரஜினிகாந்த் அதிரடி!

வள்ளுவர் ஞானி சித்தர், ஞானி சித்தர்களை ஒருகுறிப்பிட சாதி மதத்திற்குள் அடக்கி விட முடியாது.

எனக்கும்  காவி சாயம் பூச முயற்சி நடக்கிறது என்று ரஜினிகாந்த் வெளிப்படையாகப் பேசியுள்ளார். 

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ரஜினி தனது வீட்டிற்கு திரும்பினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘வள்ளுவருக்கு காவி  சாயம் பூசுவது குறித்து கேட்கிறீர்கள். வள்ளுவர் ஞானி சித்தர், ஞானி சித்தர்களை ஒருகுறிப்பிட சாதி மதத்திற்குள் அடக்கி விட முடியாது. பாஜக தங்களது இணையப் பக்கத்தில் வள்ளுவர் போட்டோவை பதிவிட்டார்கள். அது அவர்கள் விருப்பம். ஆனால்  அதை சர்ச்சையாக்கி இருப்பது சில்லியாக உள்ளது. நாட்டில் எவ்வளோ பிரச்னைகள் உள்ளது. என்னை, பொன் ராதாகிருஷ்ணன் சந்தித்தது சாதாரண சந்திப்புதான்’ என்றார்.

rajini

தமிழகத்தில் காலியாக உள்ள பாஜக தலைவர் பதவிக்கு வர போவதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து பேசிய அவர், எனக்கும்  காவி சாயம் பூச முயற்சி நடக்கிறது. திருவள்ளுவருக்கும் காவி சாயம்  பூச முயற்சி நடக்கிறது.  ஆனா நானும் அவரும் மாட்ட மாட்டோம்’ என்றார். 

valluvar

பாஜகவுக்கு ஆதரவாகவே கருத்து சொல்லி வரும் ரஜினிகாந்த் பாஜகவின் ஆதரவாளர் என்ற விமர்சனத்தை மற்ற அரசியல் கட்சியினர் கூறி வருகின்றனர். அதனால் மத்திய அரசு கமலை விட்டுவிட்டு ரஜினிக்கு விருது கொடுப்பதாகவும் விமர்சித்து வருவது  குறிப்பிடத்தக்கது.