காவி உடை இந்தியாவுக்கு ராசியில்லை…. இங்கிலாந்திடம் தோற்றுப்போன பரிதாபம்!! 

 

காவி உடை இந்தியாவுக்கு ராசியில்லை…. இங்கிலாந்திடம் தோற்றுப்போன பரிதாபம்!! 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியை தழுவியது இந்தியா.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியை தழுவியது இந்தியா.

உலகக் கோப்பை 2019 கிரிக்கெட் தொடர் பிர்மிங்கம் நகரின் எட்ஜ்பேஸ்டன் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இன்றைய போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோரகன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் விஜய் சங்கர் இடம்பெறவில்லை. விஜய் சங்கருக்கு பதிலாக ரிஷப் பந்த் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து மொயின் அலி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக லியாம் பல்கன்ட் அணியில் சேர்க்கப்பட்டார். இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய், ஜானி பேரிஸ்டோவ் களமிறங்கினர். இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து வீரர்களில் பேர்ஸ்டோவ் 111 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 79 ரன்களும் எடுத்தனர்

இதையடுத்து 338 ரன்கள் எடுத்தால்  வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா தொடக்கத்திலிருந்தே நன்றாக தான் விளையாடியது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா களமிறங்கினார்கள். வோக்ஸ் பந்துவீச்சில் டக் அவுட் ஆகி ராகுல் வெளியேறினார். அதனால் கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். ரோகித் மற்றும் விராட் ஜோடி 100 ரன்களை கடந்து துடிப்புடன் விளையாடி வந்தனர். 40 ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்து சிறகடித்து விளையாடி வந்தனர். பிளங்கட் ஓவரில் சிக்ஸ் அடிக்க முயன்ற ஹர்திக் பாண்ட்யா, ஸ்ட்ரெய்ட்டில் ஜேம்ஸ் வின்சிடம் கேட்ச் கொடுத்து, 33 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதியாக 50 ஓவர் முடிவில் இந்தியா 306 ரன்கள் மட்டுமே எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியை தழுவியது.