காவிரி மேலாண்மை ஆணையம் டெல்லியில் இன்று கூடுகிறது

 

காவிரி மேலாண்மை ஆணையம் டெல்லியில் இன்று கூடுகிறது

காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று கூடுகிறது

டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று கூடுகிறது.

காவிரி நதி நீரை பங்கீடு செய்வதற்காக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி மத்திய அரசு கடந்த மே மாதம் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அமைத்தது. மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் கடந்த ஜூலை மாதம் டெல்லியில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, மசூத் உசேன் தலைமையிலான இந்த ஆணையத்தின் இரண்டாவது கூட்டம் டெல்லியில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

இதில், காவிரி நீர் பங்கீட்டு மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரியின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். தமிழகத்தின் சார்பில் பொதுப்பணித்துறை செயலர் பிரபாகர் மற்றும் தமிழக காவிரி தொழில்நுட்ப பிரிவு உறுப்பினர் சுப்பிரமணியம் கலந்து கொள்கின்றனர்.

கேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வளத் துறை ஒப்புதல் அளித்துள்ளதற்கு இந்த கூட்டத்தின் போது தமிழகம் தனது எதிர்ப்பி தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.