காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவர்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு

 

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவர்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது

டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது. ஆணையத்தின் இடைக்கால தலைவராக மசூத் உசைன் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய நீர்வள ஆணைய தலைலவராகவும் மசூத் உசைன் உள்ளார்.

இதனிடையே, மேகேதாட்டுவில் கர்நாடகா அணை கட்ட விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க மத்திய நீர்வளத்துறை ஆணையம் அண்மையில் அனுமதி வழங்கியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக அரசு, இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்நிலையில், நீர்வள ஆணைய தலைவராக மசூத் உசைன் உள்ளதால், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு முழுநேர தலைவரை நியமிக்க வேண்டும் என கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது. அதில், மசூத் உசைன்  பாரபட்சமாகவும், தன்னிச்சையாகவும் செயல்படுகிறார். மத்திய நீர்வளத்துறை தலைவர், காவரி மேலாண்மை ஆணைய தலைவராக இருப்பது பொருத்தமற்றது. எனவே, காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவரை நியமிக்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.