காவிரி பிரச்னையை பேசி தீர்க்க வேண்டும்: கர்நாடக முதல்வர் குமாரசாமி வேண்டுகோள்

 

காவிரி பிரச்னையை பேசி தீர்க்க வேண்டும்: கர்நாடக முதல்வர் குமாரசாமி வேண்டுகோள்

சென்னை: 125 ஆண்டுகால காவிரி பிரச்னையை பேசி தீர்க்க வேண்டும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.

மேகதாதுவில் அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து தமிழக அரசு சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கும் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மேகதாது அணை விவகாரத்தில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு தடை விதிக்க முடியாது என தீர்ப்பளித்தது.

இந்நிலையில், கர்நாடக முதல்வர் குமாரசாமி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 125 ஆண்டுகால காவிரி நதி நீர் பிரச்சனையை பேசி தீர்க்க வேண்டும். தமிழக மக்களும், கர்நாடக மக்களும் சகோதரர்கள். காவிரி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம்.  மேகதாது அணை விவகாரத்தை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.  தமிழகத்தில் 50 சதவீத தண்ணீர் கடலில் கலக்கிறது என்றார்.