காவிரி கூக்குரலுக்கு ஜக்கி வாசுதேவிடம் கணக்குக் கேட்கிறது நீதிமன்றம்.

 

காவிரி கூக்குரலுக்கு ஜக்கி வாசுதேவிடம் கணக்குக் கேட்கிறது நீதிமன்றம்.

ஈஷா அமைப்பின் தலைவரான ஜக்கி வாசுதேவ் கடந்த ஆண்டு ‘காவிரி கூக்குரல்’ என்ற பெயரில் காவிரி ஆற்றை மீட்டெடுக்கும் திட்டம் என்றார்.அதன்படி காவிரியின் இரு கரைகளிலும் 253 கோடி மரங்கள் நடப்போவதாக அறிவித்தார். 

ஈஷா அமைப்பின் தலைவரான ஜக்கி வாசுதேவ் கடந்த ஆண்டு ‘காவிரி கூக்குரல்’ என்ற பெயரில் காவிரி ஆற்றை மீட்டெடுக்கும் திட்டம் என்றார்.அதன்படி காவிரியின் இரு கரைகளிலும் 253 கோடி மரங்கள் நடப்போவதாக அறிவித்தார். 

cauvery-calling-01

இது அப்போதே விமர்சனத்திற்கு உள்ளானது. அத்தனை மரங்களை நடுவதற்கு காவிரிக்கரையில் இடமிருக்குமா?.அந்த மரங்கள் அரசு புறம்போக்கு நிலத்தில் மட்டும் நடப்படுமா,தனியார் நிலங்களிலும் நடப்படுமா?.அதற்கு அவர்களது ஒத்துழைப்பு கிடைக்குமா போன்ற பல கேள்விகள் எழுந்தன.ஜக்கி இந்தக் கேள்விகள் எதையும் கண்டு கொள்ளாமல்,ஒரு மரம் நட 42 ரூபாய் என்று வசூலைத் துவக்கினார்.இதற்கு பல நடிகர் நடிகைகளும் பிரபலங்களும் ஆதரவளித்தனர்.

இது தொடர்பாக கர்நாடகாவைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் ஏ.வி அமர்நாத் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார்.ஜக்கி வாசுதேவ் அறிவித்துள்ளபடி ஒரு மரத்துக்கு 42 ரூபாய் வீதம் 253 கோடி மரங்களுக்கு 10,626 கோடி வசூலிக்கப் போகிறார்.இதற்கு மத்திய மாநில அரசுகளின் முறையான அனுமதி பெறப்படவில்லை என்று அந்த மனுவில் தெரிவித்து இருந்தார். இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி அபெய் ஒகா,ஹேமந்த் சந்திர கவுடா முன்னிலையில் நடைபெற்றது.

cauvery-calling-02

அதில் நீதிபதி ஒகா சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். ஆன்மீக அமைப்புகள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவையாகத் தங்களைக் கருதிக்கொள்ளக் கூடாது. நிதி வசூலிப்பது என்றால் ஒரு ட்ரஸ்ட்,அல்லது கம்பெனி, அல்லது சொசைட்டியாக பதிவு செய்யப்பட வேண்டும்.காவிரி கூக்குரல் என்பது இயக்கம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. விவசாயிகளை கட்டாயப்படுத்தி நிதி வசூலிக்கப்படவில்லை என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா.இதுவரை எவ்வளவு நிதி வசூலித்து இருக்கிறீர்கள்? போன்ற கேள்விகளை எழுப்பியதுடன்,இது குறித்து வரும் ஃபிப்ரவரி 12-ம் தேதிக்குள் கர்நாடக அரசும்,ஈஷா அமைப்பும் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறார்.

இந்த வழக்கில் பல.அதிர்ச்சி தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப் படுகிறது.