காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!!

 

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!!

காவிரி கரையோர வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. 

கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ண சாகர் அணையில் இருந்து நீர் வரத்து அதிகரித்ததால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் கடந்த 7 ஆம் தேதி முழுக் கொள்ளளவை எட்டியது. அதன் பிறகு, பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப் பட்டு அணையின் நீர் மட்டம் குறைந்தது. 

Mettur dam

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக கர்நாடக நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால், மேட்டூர் அணையின் நீர் வரத்து 40,000 கன அடியாக உள்ளது. ஏற்கனவே, முழுக் கொள்ளளவை எட்டிய மேட்டுர் அணை, இரண்டாவது முறையாக முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப் படுகிறது. 

மேட்டூர் அணை நிரம்பினால் நீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் என்பதால் காவிரி கரையோரம் வசிக்கும் நேற்றே மத்திய ஜல சக்தி அமைச்சகம் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தியது. இதனையடுத்து காவிரி கரையோர வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.