காவிரியில் வெள்ளப்பெருக்கு: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு!

 

காவிரியில் வெள்ளப்பெருக்கு: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு!

காவிரி நீர் திறந்து விட்டதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு 12 மாவட்ட ஆட்சியர்களுக்குத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

காவிரி கரையோரம் உள்ள சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி,  தருமபுரி, கிருஷ்ணகிரி, அரியலூர், தஞ்சை, திருவாரூர், கடலூர் மற்றும் நாகை ஆகிய 12 மாவட்டங்கள் உள்ளன. தற்போது காவிரி நீர் திறந்து விட்டதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த 12 மாவட்டங்களின் ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச்  செய்யுமாறு வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் கேட்டுக்கொண்டுள்ளார்

குறிப்பாக காவிரியில் திறந்துவிடப்படும் நீரின் அளவு குறித்துத் தொடர்ந்து பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் காவிரி ஆற்றில் குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ அல்லது மீன்பிடிக்கவோ யாரையும் அனுமதிக்கக் கூடாது.

ஆபத்தான பகுதிகளில் செல்ஃபி எடுக்கக்கூடாது என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.