காவிரித் தாய்க்கு 125 அடி உயரமுடைய பிரம்மாண்டமான சிலை : கார்நாடக அரசு அறிவிப்பு!

 

காவிரித் தாய்க்கு 125 அடி உயரமுடைய பிரம்மாண்டமான சிலை : கார்நாடக அரசு அறிவிப்பு!

காவிரித் தாய்க்கு 1200 கோடி ரூபாய் செலவில் 125 அடி உயரமுடைய பிரம்மாண்டமான சிலை அமைக்க கர்நாடக அரசு திட்டமிட்டிருக்கிறது. 

மாண்டியா : காவிரித் தாய்க்கு 1200 கோடி ரூபாய் செலவில் 125 அடி உயரமுடைய பிரம்மாண்டமான சிலை அமைக்க கர்நாடக அரசு திட்டமிட்டிருக்கிறது. 

கர்நாடகத்தின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை அருகே காவிரித் தாய்க்கு  125 அடி உயரமுடைய பிரம்மாண்டமான  சிலையை நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு சுமார் 1200 கோடி ரூபாய் பொருட்செலவாகும் என்று கூறப்படுகிறது. சுற்றுலா வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு கர்நாடகத்தின் நீர்வளத்துறை அமைச்சகம் இந்த திட்டத்தை அறிவித்துள்ளது. டிஸ்னிலேண்ட் போன்ற பொழுது போக்குப் பூங்காவுடன் காவிரித் தாய்க்கு சிலை நிறுவப்படும் என்று கர்நாடக அமைச்சர் டி.கே. சிவகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் குஜராத்தில் நர்மதா கரையில் சுமார் 600 அடி உயரமுடைய சர்தார் வல்லபபாய் பட்டேல் சிலையைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதே போன்று அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் சிலையை சரயூ நதிக்கரையில் நிறுவ உத்தரப்பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது .