காவல் துறை துணைக் கண்காணிப்பாளரைத் தாக்கிய ஆட்டோ ஓட்டுனர்கள்

 

காவல் துறை துணைக் கண்காணிப்பாளரைத் தாக்கிய ஆட்டோ ஓட்டுனர்கள்

காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் ஒருவரை ஆட்டோ ஓட்டுநர் தாக்கிய சம்பவம் கர்நாடக மாநிலம் பெங்களூரில் அரங்கேறியுள்ளது. 

காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் ஒருவரை ஆட்டோ ஓட்டுநர் தாக்கிய சம்பவம் கர்நாடக மாநிலம் பெங்களூரில் அரங்கேறியுள்ளது. 

பெங்களூரில் காவல்துறை உதவிக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வரும் காரியண்ணா (58) என்பவரை இரண்டு ஆட்டோ ஓட்டுனர்கள் சேர்ந்து பெங்களூரு ரயில் நிலையம் அருகில் வைத்துத் தாக்கியுள்ளனர். 

ஆட்டோ வாடகை கொடுப்பது தொடர்பான வாக்குவாதம் முற்றி ஆட்டோ ஓட்டுனர்கள் காரியண்ணாவைத் தாக்கத் தொடங்கியுள்ளனர். பின்னர் அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் காரியண்ணாவைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

பின்னர் அவர் அளித்த புகார் மனுவில், “நான் ஆட்டோ ஓட்டுனரிடம் மீட்டர் போட்டு ஓட்டுமாறும் அதற்கு மேல 10 ருபாய் வாடகை வாடகை தருவதாகவும் கூறினேன். அனால், ஆரோ ஓட்டுநர் அதற்கு மறுத்ததுடன், 6 கிமீ தூரம் பயணித்ததற்கு 200 ரூபாய் வாடகையாகக் கேட்டு என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நான் மறுத்ததால், மற்றொரு ஓட்டுனருடன் சேர்ந்து என்னைத் தாக்கத் தொடங்கி விட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களைப் பார்த்ததும் ஆட்டோ ஓட்டுனர்கள் ஓடி விட்டனர். இப்போதும் தலைமறைவாகியிருக்கும் அவர்களை காவல்துறை தேடி வருகின்றது.