காவல்துறை யாருக்கு சேவகம் செய்து கொண்டிருக்கிறது; பொன்பரப்பி விவகாரத்தில் ஸ்டாலின் காட்டம்!

 

காவல்துறை யாருக்கு சேவகம் செய்து கொண்டிருக்கிறது; பொன்பரப்பி விவகாரத்தில் ஸ்டாலின் காட்டம்!

ஆம்பூரில் இரு தரப்பினர் இடையே நடைபெற்ற மோதலை போலீசார் தடியடி நடத்தி கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதில், ஒருவரது மண்டை உடைக்கப்பட்டது

சென்னை: தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் இடைத்தேர்தலின் போது, ஆங்காங்கே நடைபெற்ற வன்முறை தொடர்பான விவகாரத்தில், காவல்துறை யாருக்கு சேவகம் செய்து கொண்டிருக்கிறது என திமுக தலைவ்வர் ஸ்டாலின் காட்டமான கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் நேற்று இரண்டாம் கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. அப்போது ஆங்காங்கே சில இடங்களில் மோதல் வெடித்தது. ஆம்பூரில் இரு தரப்பினர் இடையே நடைபெற்ற மோதலை போலீசார் தடியடி நடத்தி கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதில், ஒருவரது மண்டை உடைக்கப்பட்டது. அப்போது, போலீசார் வானத்தை நோக்கி துப்பாகியால் சுட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

election violence

கோவில்பட்டி அருகே வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்ததால் ஏற்பட்ட கைகலப்பின் போது, ஒருவர் தாக்கப்பட்டதில் ரத்தம் சொட்ட சொட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி களத்துமேட்டு பகுதியில் ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு முன்பக்க பற்கள் உடைந்தது.

ponparappi attack

மேலும், அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் இரு பிரிவினர் இடையே நடந்த மோதலில், ஒரு பிரிவை சேர்ந்தவர்களின் 20 வீடுகளை மற்றொரு பிரிவினர் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதனால், அங்கு கலவரம் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் 8 பேர் காயமடைந்தனர். சம்பவம் தொடர்பாக 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காவல்துறை அலட்சியத்தால் சட்டம் – ஒழுங்கு பிரச்னைகள் ஏற்பட்டு, இணக்கமாக வாழும் மக்கள் மத்தியில் இனம்புரியாத பீதி ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும், காவல்துறை யாருக்கு சேவகம் செய்து கொண்டிருக்கிறது என காட்டமாக கேள்வி எழுப்பிய மு.க.ஸ்டாலின், நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் சுயநல தீய சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.