காவல்துறை உதவியுடன் அதிமுக பணப்பட்டுவாடா?!

 

காவல்துறை உதவியுடன் அதிமுக பணப்பட்டுவாடா?!

தேர்தல் துவங்கியதில் இருந்து ஆங்காங்கே கோடிக்கணக்கில் பணம் சிக்கிய வண்ணம் உள்ளது. ஆனால் தேர்தல் ஆணையமோ, வருமான வரித்துறையோ அதிகாரப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இந்நிலையில் அமமுக தங்க தமிழ்ச் செல்வன், அதிமுக காவல்துறை உதவியுடன் பணப்பட்டுவாடா செய்கிறது என தெரிவித்தார்.

தமிழகத்தில் மக்களவை தேர்தலும், இடைத்தேர்தலும் ஒருங்கே நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகள் எல்லாம் தங்கள் வெற்றிக்கான வேலைகளில் தீவிரம்காட்டி வருகிறது. ஒவ்வொரு தொகுதியாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, வாக்குக்கு பணம் கொடுக்கும் பணியும் சிறப்பாக நடைபெற்று வருவதாய் கூறப்படுகிறது.

money.jpg

வாக்குக்காக பணம் கொடுக்கும் பழக்கம் இந்திய அளவில் பல கட்சிகளிடம் இருந்தாலும், தமிழகம் அதில் அதிக கவனத்தை பெருகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 20 ரூபாய் டோக்கன் கொடுக்கப்பட்ட செய்தியை மறந்திருக்க மாட்டோம்! இந்தமுறை தேர்தல் ஆணையம் வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்க, பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது. ஆங்காங்கே தொடர் சோதனைகள் நடைபெற்று வருகிறது.

திமுக, அதிமுக பிரமுகர்களிடம் இருந்து பணம் சிக்கியதாக கூறப்படுகிறது. திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லத்தை வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதன்பிறகு சிமெண்ட் குடோனில் கட்டுக் கட்டாய் பணம், திமுக பிரமுகர் மீது சந்தேகம் என்றெல்லாம் செய்தி வந்தது. வருமான வரித்துறையினர் அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிட்டதாக தெரியவில்லை.

kovai

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக அமைச்சர் வேலுமணியின் பினாமி என்று கூறப்படும் சபேசன் வீட்டில் 15 கோடி ரூபாய் எடுக்கப்பட்டது பற்றி கேள்வி எழுப்பினார். அந்த பணத்தைதான் துரைமுருகன் பணம் என்று கூறுகிறார்கள் என வார்ட் எண்ணை வைத்து திமுக தரப்பு கூறியது. இப்படியாக தேர்தல் துவங்கியதில் இருந்து ஆங்காங்கே கோடிக்கணக்கில் பணம் சிக்கிய வண்ணம் உள்ளது. ஆனால் தேர்தல் ஆணையமோ, வருமான வரித்துறையோ அதிகாரப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இந்நிலையில் அமமுக தங்க தமிழ்ச் செல்வன், அதிமுக காவல்துறை உதவியுடன் பணப்பட்டுவாடா செய்கிறது என தெரிவித்தார்.

அதிமுக தரப்பு காவல்துறை உதவியுடன் எல்லா தொகுதிகளுக்கும் பணப்பட்டுவாடா செய்வதாக கூறப்படுகிறது. ஸ்டெர்லைட் பிரச்சனை, நீட் பிரச்சனை என அதிமுக, பாஜக கூட்டணி மீது அதிருப்தியில் இருக்கும் மக்களை, ஆயிரக்கணக்கில் பணத்தை கொடுத்து சரிகட்ட நினைக்கிறதாம் அதிமுக தரப்பு! ஆளுங்கட்சிக்கு உதவி செய்வதை காவல்துறை கடைமையாக கொண்டுள்ளது எனவும் பொது வெளியில் விமர்சிக்கப்படுகிறது.