காவல்துறையில் இப்படியெல்லாம் கூட இருக்கிறார்களா!? நெகிழ வைத்த பெண் காவலர்!!

 

காவல்துறையில் இப்படியெல்லாம் கூட இருக்கிறார்களா!? நெகிழ வைத்த பெண் காவலர்!!

ஜம்மு-காஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்களின் குடும்பங்களுக்கு உதவி புரிந்துள்ள பெண் காவலர் ஒருவரின் செயல் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது

சென்னை: ஜம்மு-காஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்களின் குடும்பங்களுக்கு உதவி புரிந்துள்ள பெண் காவலர் ஒருவரின் செயல் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

காவல் துறை என்றாலே நல்ல விஷயங்கள் அவ்வப்போது வந்தாலும் அதிர்ச்சி தரும், தரமான சம்பவங்களே அதிகம் இருக்கும் என்பதை மறுக்க முடியாது! வாட்ஸ் ஆப் முழுக்க வளம் வரும் வீடியோ, ஆடியோ கிளிப்களே அதற்கு சாட்சி.

இப்படியும் இருப்பார்களா என்று அவ்வப்போது ஆச்சர்யப்பட வைப்பவர்களுக்கு இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி நெகிழ வைத்திருப்பவர் E-2 ராயப்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் தலைமை காவலர் தமிழ்ச்செல்வி.

காஷ்மீரில் வீரமரணமடைந்த தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு சிஆர்பிஎப் வீரர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவர்களது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியதோடு மட்டும் இல்லாமல், இரண்டு குடும்பத்தினருக்கும் தன்னால் இவ்வளவுதான் செய்ய முடிஞ்சது…தப்பா எடுத்துக்காதீங்க என்று கூறி தலா ரூ.10,000-த்தை வழங்கியுள்ளார்!

கோடிகளில் கொழிக்கும் சினிமா ஹீரோக்கள், ஹீரோயின்கள் பலரும் இந்த துயர் சம்பவம் அண்டார்டிக்கா பகுதியில் நடந்தது போல் கண்டும் காணாமல் கடந்து போன நிலையில், தமிழ் செல்வியின் செயல் பலரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.

வாங்குற சம்பளம் குறைவா இருந்தாலும் நமக்கே ஆயிரத்தெட்டு பிரச்னை இருந்தாலும், அதெல்லாம் மறந்து லீவு போட்டுட்டு அங்க தேடிப்போய் கொடுத்த அந்த மனசு இருக்கே….!? வாழ்க சகோதரி.!!