காவல்துறையினருக்கு ‘தர்பார்’ சிறப்பு காட்சி…குடும்பத்துடன் வர அனுமதி!

 

காவல்துறையினருக்கு ‘தர்பார்’ சிறப்பு காட்சி…குடும்பத்துடன் வர அனுமதி!

சுனில் ஷெட்டி, நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்

இயக்குநர்  ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம்  ரசிகர்களுக்குப் பொங்கல் விருந்தாக தமிழகத்தில் நேற்று வெளியானது. இதில் சுனில் ஷெட்டி, நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  சூப்பர் ஸ்டாரின் தர்பார் படத்திற்குக் கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.

ttn

இந்நிலையில் தேவகோட்டை லட்சுமி திரையரங்கில் தேவகோட்டையை சேர்ந்த காவல்துறை மற்றும் அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தர்பார் சிறப்புக் காட்சியை காண இன்று காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.   தேவகோட்டை ASP கிருஷ்ணராஜ் ஐபிஎஸ் இதற்கான ஏற்பாட்டைச் செய்திருந்தார்.  25 ஆண்டுகளுக்குப் பின்னர் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் போலீசாக நடித்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ttn

முன்னதாக தர்பார் கடந்த  4 நாட்களில் ரூ.150 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.