காவலன் SOS செயலி மூலம் வந்த புகார் : 2 பேரிடம் காவல்துறையினர் விசாரணை !

 

காவலன் SOS செயலி மூலம் வந்த புகார் : 2 பேரிடம் காவல்துறையினர் விசாரணை !

பெண்களின் பாதுகாப்புக்காக காவல்துறையினரால் உருவாக்கப்பட்ட செயலி காவலன் SOS. பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டால் அந்த செயலி மூலம் காவல் துறைக்குத் தகவல் அளிக்க முடியும்.

பெண்களின் பாதுகாப்புக்காக காவல்துறையினரால் உருவாக்கப்பட்ட செயலி காவலன் SOS. பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டால் அந்த செயலி மூலம் காவல் துறைக்குத் தகவல் அளிக்க முடியும். அந்த தகவல் கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று, அதில் ஈடுபடும் நபர்களை காவல்துறை உடனே கண்டு பிடிக்கும். இதன் முழு செயல்பாடு குறித்தும் சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருந்தார். முன்னதாக, டிஜிபி திரிபாதி காவலன் SOS செயலி பற்றி பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படி, அனைத்து காவல் நிலையத்துக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். 

ttn

இந்நிலையில், இந்த செயலி மூலம் ஒரு பெண் காவல் துறைக்குப் புகார் அளித்துள்ளார். சென்னை ஆர்.கே நகரில் வசிக்கும் ஒரு பெண்ணின் வீட்டிற்குள் கூரியர் பாய் என்று கூறிக்கொண்டு இரண்டு பேர் வந்துள்ளதாக இந்த செயலி மூலம் புகார் வந்துள்ளது. அதனால், உடனடியாக அங்குச் சென்ற ஆர்.கே நகர் காவல் துறையினர் சலீம் மற்றும் தாவுத் ஆகிய இரண்டு பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.