‘காவலன் SOS செயலி’ : பெண்களைக் கயவர்களிடம் இருந்து காக்க காவல்துறையின் புதிய முயற்சி !

 

‘காவலன் SOS செயலி’ : பெண்களைக் கயவர்களிடம் இருந்து காக்க காவல்துறையின் புதிய முயற்சி !

இணைய தளத்தில் காவலன் SOS என்ற செயலி உள்ளது. அதனைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். அதில் உங்களது உறவினர்கள் எண் அல்லது பெற்றோர் எண்களைப் பதிவேற்றம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மகளிர் கல்லூரியில் பெண்களுக்காகப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே விஸ்வநாதன், பெண்களின் பாதுகாப்புக்காக காவல்துறையின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள புதிய காவலன் SOS செயலி பற்றி விளக்கமாகக் கூறினார். 

ttn

அதில், ‘இணைய தளத்தில் காவலன் SOS என்ற செயலி உள்ளது. அதனைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். அதில் உங்களது உறவினர்கள் எண் அல்லது பெற்றோர் எண்களைப் பதிவேற்றம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எங்காவது வெளியே செல்லும் போது உங்களுக்குப் பாதுகாப்பு தேவை என்பது போலத் தோன்றினால் உடனே, அதில் இருக்கும்  SOS என்ற பட்டனை அழுத்துங்கள். 

ttn

அதன் மூலம் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளிக்கப்பட்டு, உங்களின் செல்போன் எண்ணுக்கு அழைப்பு வரும். உங்களால் அந்த அழைப்பைப் பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், அது தானாகவே வீடியோவாக பதிவு செய்து விடும்’ என்று ஏ.கே விஸ்வநாதன் தெரிவித்தார். இந்த செயலி பெண்களைப் பாதுகாக்க உதவி புரியும் என்றும் இந்த செயலியைப் பயன்படுத்த உங்களுக்கு எந்த சூழ்நிலையும் வரக் கூடாது என ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன் என்றும் தெரிவித்தார். மேலும், அந்த காவலன் SOS செயலியின் செயல்பாடுகள் குறித்த துண்டு பிரச்சாரங்களையும் கல்லூரி மாணவிகளுக்கு வழங்கினார். 

ttn