காவலன் செயலி மூலம் பிடிபட்ட இளைஞர்கள்!  காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!!

காவலன் செயலி மூலம் பிடிபட்ட இளைஞர்கள்!  காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!!

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீற முயன்ற இரு இளைஞர்கள் காவலன் செயலி மூலம் சில நிமிடங்களிலேயே கைது செய்யப்பட்டனர். 

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீற முயன்ற இரு இளைஞர்கள் காவலன் செயலி மூலம் சில நிமிடங்களிலேயே கைது செய்யப்பட்டனர். 

ஆர்.கே. நகர் பகுதியிலுள்ள ப்ரீத்தி என்ற பெண் அவரது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது கொரியர் வந்துள்ளதாக கூறி இரண்டு இளைஞர்கள் வீட்டிற்குள் நுழைய முயன்றுள்ளனர். சந்தேகமடைந்த ப்ரீத்தி உடனடியாக காவல்துறை அறிமுகப்படுத்திய காவலன் என்ற செயலியிலிருந்த எஸ்.ஓ.எஸ். பட்டனை அழுத்தியுள்ளார்.

காவலன் செயலி

தகவலை பெற்ற அடுத்த 6 நிமிடங்களிலேயே நிகழ்விடத்திற்கு வந்த ஆர்.கே. நகர் காவல்துறையினர் அதிரடியாக நுழைந்து மர்ம நபர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்தனர். தமிழகத்திலேயே முதன் முறையாக  காவலன் செயலி மூலம் இருவர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் செயர் சலீம், தாவூத் என்பதும், இருவரும் மது போதையில் இருந்ததும் தெரியவந்தது.