காவலன் செயலி பயன்படுத்தினால் பெண்களுக்கு 10% டிஸ்கவுண்ட்.. அசத்தும் ஹோட்டல் உரிமையாளர் !

 

காவலன் செயலி பயன்படுத்தினால் பெண்களுக்கு 10% டிஸ்கவுண்ட்.. அசத்தும் ஹோட்டல் உரிமையாளர் !

பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டால் அந்த செயலி மூலம் காவல் துறைக்குத் தகவல் அளிக்க முடியும்.

பெண்களின் பாதுகாப்புக்காக காவல்துறையினரால் உருவாக்கப்பட்ட செயலி காவலன் SOS. பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டால் அந்த செயலி மூலம் காவல் துறைக்குத் தகவல் அளிக்க முடியும். அந்த தகவல் கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று, அதில் ஈடுபடும் நபர்களை காவல்துறை உடனே கண்டு பிடிக்கும். பாதுகாப்பற்ற நேரத்தில் இந்த செயலியைப் பெண்கள் பயன்படுத்துமாறும், அதனை செல்போனில் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளுமாறும் காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் தெரிவித்திருந்தார். இது வரை சுமார் 5 லட்சம் பெண்கள் அதனை பதிவிறக்கம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. 

ttn

இந்நிலையில், மதுரை மாவட்டம் பொன்மேனி பகுதியைச் சேர்ந்த ராஜபிரபு நடத்தி வரும் ‘மீனாட்சி மெஸ்’ என்ற உணவகத்தில் அறிவிப்புப் பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில், தாய்மார்கள் மற்றும் பெண்களின் நலம் கருதி எங்களால் முடிந்த சிறு விழிப்புணர்வு என்றும் காவலன் செயலி பயன்படுத்தும் பெண்களுக்கு 10% தள்ளுபடி என்றும் அச்சிடப்பட்டுள்ளது. பெண்களிடம் காவலன் செயலியைப் பற்றிய விழிப்புணர்வைக் கொண்டு வர ராஜபிரபு மேற்கொண்ட இந்த நூதன முயற்சிக்கு காவல்துறையினரும் பொதுமக்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.