காளை ஜெயிச்சும், முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்

 

காளை ஜெயிச்சும், முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்

ஒட்டு மொத்த அளவில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்ட போதும், முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.59 ஆயிரம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது.

அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை மேலும் தொடங்க உள்ளது. அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளில் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றனர். சர்வதே சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரம் தற்போது மிதமாக இருக்கிறது. இது தவிர பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகளால் கடந்த வியாழன் கிழமை இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. 

பங்கு சந்தை

வாரத்தின் கடைசி வர்த்தக தினமான நேற்று இந்திய பங்குச் சந்தைகளில் மரண அடி விழுந்தது. மத்திய பட்ஜெட்டில் எதிர்பார்த்த பல சலுகைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகவில்லை. இது முதலீட்டாளர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்தது. இதனால் அவர்கள் பங்குகளை விற்று தள்ளினர். இதனால் பங்குச் சந்தைகளில் பலத்த சரிவு ஏற்பட்டது. 

நேற்று மட்டும் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 395 புள்ளிகள் இறங்கியது. இருப்பினும் இந்த வாரத்தில் ஒட்டு மொத்த அளவில் பங்கு வர்த்தகம் சிறிய ஏற்றத்துடன் முடிவடைந்தது. கடந்த 5 வர்த்தக தினங்களின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 118.75 புள்ளிகள் சரிந்து 39,513.39 புள்ளிகளில் நிலை கொண்டுள்ளது.

பங்குச் சந்தை

பங்கு வர்த்தகம் இந்த வாரம் ஏற்றத்துடன் முடிவடைந்தாலும் முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்தான் ஏற்பட்டது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு கடந்த 28ம் தேதி ரூ.151.94 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் நேற்று வர்த்தகத்தின் முடிவில் அது ரூ.151.35 கோடியாக குறைந்தது. ஆக, இந்த வாரத்தில் முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.59 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.