கால பைரவாஷ்டமியை முன்னிட்டு அனைத்து பைரவர் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு!

 

 கால பைரவாஷ்டமியை முன்னிட்டு அனைத்து பைரவர் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு!

பைரவரை பைரவாஷ்டமி தினத்தில் வழிபாடு செய்வதால் ஒரு வருடம் அஷ்டமி பூஜை செய்த பலன்களை பெறலாம்.

இன்று பைரவாஷ்டமி தினம் தமிழகத்தில் உள்ள அனைத்து பைரவர் கோயில்களிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி திதி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். இதனை ருத்ராஷ்டமி, தேவாஷ்டமி என்றும் காலபைரவாஷ்டமி என்றும் சொல்வார்கள். 

bhairavar

படைத்தல், காத்தல், அழித்தல் அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய தொழில் களை செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்கு திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது. 

செல்வத்தை நமக்கு வாரி வழங்கும் அஷ்ட லட்சுமிகள், ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டு தங்களது செல்வ வள சக்தியை மேம்படுத்தி கொள்கிறார்கள். 

bhairavar

எனவே நாமும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று பைரவரை வழிபட்டால் மங்காத செல்வ வளத்தை பெறலாம் என்பது ஐதீகமாகும்.

பைரவர் என்றால் நம் பயம், துன்பம், துயரம் எல்லாவற்றையும் போக்கி நம்மை காப்பவர் என்று பொருள். பைரவரை நீங்கள் தொடர்ந்து தினமும் வணங்கினால். நவக்கிரக தோஷங்கள் விலகி, தீவினைகள் அகலும். 

கால பைரவாஷ்டமி தினமான இன்று பக்தர்கள் காலை முதல் மாலை வரை விரதம் இருந்து மாலை நேரத்தில் அருகில் உள்ள சிவன் கோயில்களுக்கு சென்று பைரவரை வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

bhiravar

இன்றைய அஷ்டமி தினத்தில் பைரவரை வழிபாடு செய்வது ஒருவருடம் அஷ்டமி பூஜை செய்ததற்கான பலன்களை பெறலாம். 

தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, சந்தன மாலை அணிவித்து சர்க்கரை பொங்கல், தயிர்சாதம், தேன், அவல் பாயசம் மற்றும் பழ வகைகளை படைத்து பைரவரை வழிபட்டால் நாம் விரும்பியதை எல்லாம் பைரவர் தருவார். தினமும் பைரவர் காயத்ரியை சொல்லி வந்தால் செல்வம் பெருகும். 

bhairavar

செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமையில் வரும் பரணி, ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம் நட்சத்திரம் இணைந்த நாள் பைரவருக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது.

சிவபெருமானின் முக்கிய அம்சமான இவரை ஒவ்வொரு வரும் அவசியம் பைரவாஷ்டமி தினத்தில் வழிபாடு செய்வதால் உங்களது வாழ்வில் சகல நன்மைகளையும் பெறலாம்.