கால அவகாசம் அளிக்காமல் சீல் வைக்கப்பட்ட வணிக வளாகம்… வியாபாரிகள் வேதனை

 

கால அவகாசம் அளிக்காமல் சீல் வைக்கப்பட்ட வணிக வளாகம்… வியாபாரிகள் வேதனை

சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இது 55 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்பதால் பழுதடைந்துபோய் இருந்தது. பொது மக்கள் நலன் கருதி இந்த கட்டிடத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கோடம்பாக்கத்தில் உள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். கால அவகாசம் அளிக்காமல் சீல் வைக்கப்பட்டதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இது 55 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்பதால் பழுதடைந்துபோய் இருந்தது. பொது மக்கள் நலன் கருதி இந்த கட்டிடத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

arcot-road kodambakkam

ஆனால், தங்களுக்கு போதுமான கால அவகாசம் வழங்கவில்லை. எனவே, சீல் வைக்கும் செயலை நிறுத்த வேண்டும் என்று வணிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், ஏற்கனவே சீல் வைக்கப்படும் என்று அறிவிப்பு வௌியிட்டிருந்தோம். அதன் அடிப்படையில் சீல் வைக்கிறோம் என்று அதிகாரிகள் உறுதியுடன் நடந்துகொண்டனர். இதனால், அரசுக்கு சொந்தமான ரேஷன் கடை, காஸ் ஏஜென்ஸி என 110 கடைகள் சீல் வைத்து மூடப்பட்டன. 
இது குறித்து தகவல் அறிந்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா அங்கு வந்து அதிகாரிகளிடம் பேசினார். ஆனாலும், சீல் வைக்கப்பட்டது. இது குறித்து அவர் கூறுகையில், “பழுதடைந்த கட்டிடத்தை இடிக்க சென்னை மாநகராட்சி நிர்வாகம் முடிவடைந்து கடந்த 31ம் தேதி வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கியது. முறைப்படி நோட்டீஸ் வழங்கி 15 நாட்கள் வரை வியாபாரிகள் தங்களது கடைகளை காலி செய்ய அவகாசம் தர வேண்டும். ஆனால் தற்போது மூன்று நாட்களிலேயே எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி போதிய கால அவகாசம் தராமல் கடைகளை பூட்டி சீல் வைத்துள்ளதுள்ளனர்” என்றார்.
பூட்டிய கடைகளுக்குள் இறைச்சி கோழிகள் காய்கறிகள் என அழுகும் பொருட்கள் இருக்கிறது. ஏற்கனவே பல விதமான நோய்கள் பரவி வரும் அபாயமான சூழலில் இது சுகாதார சீர்கேட்டை விளைவிக்கும் எனவே அரசு தலையிட்டு வியாபாரிகள் தங்களது கடைகளை காலி செய்ய போதிய அவகாசம் தர வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். இல்லையெனில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் போராட்டத்தை முன்னெடுப்போம் என எச்சரிக்கை விடுத்தார்