கால் கிலோ அணுகுண்டு அடுக்கி வச்சிருக்கோம் பாத்துக்க – பாக். அமைச்சர் பூச்சாண்டி!

 

கால் கிலோ அணுகுண்டு அடுக்கி வச்சிருக்கோம் பாத்துக்க – பாக். அமைச்சர் பூச்சாண்டி!

”இந்தியாவின் எந்த ஒரு பகுதியையும் தாக்கும் 250 கிராம் எடைகொண்ட அணு ஆயுதங்கள் எங்களிடம் உள்ளன” என சமீபத்தில் திருவாய் மலர்ந்திருக்கிறார். சமீபத்தில் பெய்த மழையால் பாகிஸ்தான் ரயில்வே சிக்னல் சிஸ்டத்தில் பிரச்னையாம், முதல்ல ரயிலை ஒழுங்கா விடுங்க பாய், அப்புறம் குண்டு பத்தி யோசிக்கலாம்!

பாகிஸ்தான் அமைச்சரவையில் பிரதமர் இம்ரான் கானையும் சேர்த்து 29 பேர் அமைச்சர்களாக இருக்கிறார்கள். பாதுகாப்புத்துறைக்கென்று ஒன்றல்ல, இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள். அமைச்சரவையில் 22வது இடத்தில் இருக்கும் ஷேக் ரஷீத் அஹமது என்பவர் ரயில்வே அமைச்சராக இருக்கிறார். ஆனால், அன்னாரின் பேட்டி எல்லாம் இந்தியாமீது போர் தொடுப்பது குறித்துத்தான் இருக்கிறது. நம்ம ஊர்ல தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கிறதுல சின்னப்பசங்களுக்குள்ள சண்டை வரும் தெரியுமா? ”ஏய் எங்கிட்ட 10 அணுகுண்டு இருக்கு, பத்த வச்சேன்னா சும்மா டமால்தான்” என ஒருவன் சொல்ல, அவ்வளவு பட்டாசு கைவசம் இல்லாத, அதனை பொறுக்கமாட்டாத இன்னொருவன் சொல்வான் “ஏய் சரவெடியில வெடிக்காம இருக்குற 10 வெடியை பொறுக்கிட்டு வந்திருக்கேன் தெரியுமா” என்று!

Pak Railway Minister Rasheed

பாகிஸ்தான் ரயில்வே அமைச்சரின் வாய்சவடாலும் அப்படித்தான் இருக்கிறது. பாகிஸ்தானின் போர்முறை குறித்தோ, தளவாடங்கள் குறித்தோ பாதுகாப்புத்துறை அமைச்சர் என்ற முறையிலும், பிரதமர் என்ற முறையிலும் மேல்மட்ட அமைச்சர்களே அடக்கிவாசிக்கும்போது, ரயில்வே மினிஸ்டரின் வாய் மட்டும் கராச்சியில் இருந்து இஸ்லாமாபாத்வரை நீள்கிறது. ”இந்தியாவின் எந்த ஒரு பகுதியையும் தாக்கும் 250 கிராம் எடைகொண்ட 125 அணு ஆயுதங்கள் எங்களிடம் உள்ளன” என சமீபத்தில் திருவாய் மலர்ந்திருக்கிறார். சமீபத்தில் பெய்த மழையால் பாகிஸ்தான் ரயில்வே சிக்னல் சிஸ்டத்தில் பிரச்னையாம், முதல்ல ரயிலை ஒழுங்கா விடுங்க பாய், அப்புறம் குண்டு பத்தி யோசிக்கலாம்! காலையிலேயே காமெடி பண்ணிகிட்டு!