கால்வாய எலி கடித்து விட்டது  அமைச்சர் உதயகுமார்!!

வைகை அணையில் இருந்து 58ம் கால்வாயில் , கடந்த 5ம் தேதி பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது.மூன்று நாட்கள் முன்புவரை எல்லாம் சரியாகவே நடந்து கொண்டிருந்தது.
நேற்று முந்தினம் ஆண்டிபட்டியை அடுத்த டி.புதூர் பகுதியில் 58ம் கால்வாய் உடைப்பெடுத்தது.உடைப்பு வழியே வெளியேறிய நீர் பாசன நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்ததைத் தொடர்ந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.நேற்று வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் டி.புதூருக்கு வந்து கால்வாய் உடைப்பை பார்வையிட்டார்.

udhayakumar

அதன் பிறகுதான் அதிர்ச்சிகரமான அந்த செய்தியை வெளியிட்டார்.

kanavai

58ம் கால்வாயை காட்டுப் பன்றிகளும் எலிகளும் தோண்டி உடைத்து விட்டன.அதனால் வயல்களில் வெள்ளம் பாய்ந்து பயிர்களை சேதப்படுத்தி விட்டது. போர்க்கால அடிப்படையில் இந்த உடைப்பைச் சீர்செய்யும் பணி நடந்து வருகிறது. அந்தப் பணி முடிவடைந்த உடன் மீண்டும் 58ம் கால்வாயில் நீர் திறந்து விடப்படும். அத்துடன் சேதமடைந்த பயிர்கள் குறித்து வருவாய் துறை அதிகாரிகளைக் கொண்டு கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.