கால்பந்து பயிற்சிபெற ஜெர்மன் செல்லும் அரசு பள்ளி மாணவர்கள்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

 

கால்பந்து பயிற்சிபெற ஜெர்மன் செல்லும் அரசு பள்ளி மாணவர்கள்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

கிராமப்புறங்களில் விளையாட்டுப் போட்டிகளை ஊக்கப்படுத்தத் தமிழக அரசு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

கால்பந்து பயிற்சிபெற ஜெர்மன் செல்லும் அரசு பள்ளி மாணவர்கள்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

சென்னை: கிராமப்புறங்களில் விளையாட்டுப் போட்டிகளை ஊக்கப்படுத்தத் தமிழக அரசு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

school

சென்னையில் பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற  அணிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் நேற்று பரிசு வழங்கினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,  ‘கிராமப்புறங்களில் விளையாட்டுப் போட்டிகளை ஊக்கப்படுத்த 69 கோடியே 64 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.  கிராமப்புற மாணவர்கள் உடற்பயிற்சி மேற்கொள்ள அரசுக்குச் சொந்தமான இடங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கிராமப்புறத்தில் உள்ள விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்துவது தொடர்பாக இன்னும் இரண்டு மூன்று மாதங்களில்   ஆலோசித்து முடிவெடுக்கப்படும். அதேபோல் அரசு மட்டுமில்லாது  தனியார் துறையிலும் விளையாட்டுத் துறை சார்பில் வேலை வாய்ப்பு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், விரைவில் ஜெர்மன் நாட்டிற்குக் கால்பந்து பயிற்சிபெற 36 மாணவர்களும், 4 பயிற்சியாளர்களும் அரசு சார்பில் அனுப்பப்படவுள்ளனர்’ என்று தெரிவித்தார்.