கால்நடைகளுக்கும் ஆம்புலன்ஸ் சேவை : அசத்தும் தமிழக அரசு..!

 

கால்நடைகளுக்கும் ஆம்புலன்ஸ் சேவை : அசத்தும் தமிழக அரசு..!

தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்த ஆம்புலன்ஸ்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கால்நடைகளுக்கு ஏதேனும் உடல்நலக் குறைவு ஏற்பட்டால், பராமரிப்பாளர்கள் அதனை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல மிகவும் சிரமத்தை எதிர்கொண்டு வந்தனர். கால்நடைகளின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது. இதனால், கால்நடைகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ் சேவை நடைமுறைக்கு வரும் என்று கால்நடைத் துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். 

ambulance

கால்நடைகளுக்காக செயல்படுத்தப்படும் ஆம்புலன்ஸில் முதலுதவி மருந்துகள், ஸ்கேனர் உள்ளிட்ட அனைத்தும் பொருத்தப்பட்டிருக்கும். கால்நடைகளுக்கு பெரிய பிரச்னை நிகழ்ந்தால் அந்த ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படும் என்றும் சிறிய அளவிலான பிரச்னைகள் இருந்தால் கால்நடைகள் இருக்கும் இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார். 

Ambulance

அதன் படி, தமிழகத்தில் கால்நடைகளுக்கான நடமாடும் ஆம்புலன்ஸ் சேவைகள் தொடங்கியுள்ளன. தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்த ஆம்புலன்ஸ்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், தமிழகத்தில் கால்நடைகளுக்கான ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி. மேலும், 1962 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால் கால்நடைகளுக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.