காலை 8 மணி முதல் 12 மணி வரை பெட்ரோல் நிலையங்களுக்கு அனுமதி- தமிழக அரசு

 

காலை 8 மணி முதல் 12 மணி வரை பெட்ரோல் நிலையங்களுக்கு அனுமதி- தமிழக அரசு

கொரோனா வைரஸின் தீவிரத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருப்பதால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் திணறிவருகின்றனர். இருப்பினும் பால், மளிகை உள்ளிட்ட  அத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.

சென்னை, கோவை, மதுரையில் வரும் ஏப்ரல் 26 முதல் 29 வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்  என்றும் சேலம் மற்றும் திருப்பூரி ஏப்ரல் 26 முதல் 28 ஆம் தேதி வரை முழு ஊடங்கு அமலில் இருக்கும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.  இந்த நாட்களில் மருத்துவமனைகள்,  பரிசோதனை கூடங்கள் வழக்கம்போல் செயல்படலாம். முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் வங்கிகளில்  33 % பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் அம்மா உணவகங்கள்,  ஏடிஎம்கள் வழக்கம் போல் செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

TN assembly

இந்நிலையில்  மேற்கண்ட 5 மாநகராட்சிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் 5 மாவட்ட முழு ஊரடங்கில் பெட்ரோல் பங்க் காலை 8 மணி முதல் 12 மணி வரை செயல்படலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் முழு ஊரடங்கின் போது காட்சி ஊடகம், அச்சு ஊடகம் வழக்கம் போல் செயல்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.