காலை 5.30க்கு ஒரே நேரத்தில் நான்கு பேருக்கும் தூக்கு! – தயார் நிலையில் திகார் சிறை

காலை 5.30க்கு ஒரே நேரத்தில் நான்கு பேருக்கும் தூக்கு! – தயார் நிலையில் திகார் சிறை

2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி இரவு டெல்லியில் ஓடும் பஸ்ஸில் 23 வயதான பிசியோதெரப்பி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டார். சிகிச்சை பலனின்றி நிர்பயா உயிரிழந்தார். இந்த வழக்கில் முகேஷ் சிங் (32), பவன் குப்தா (25), வினய் ஷர்மா (26), அக்‌ஷய் குமார் சிங் (31) ஆகிய நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களுக்கு நாளை காலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

நிர்பயா குற்றவாளிகள் நான்கு பேருக்கும் நாளை காலை 5.30க்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக திகார் சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது.
2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி இரவு டெல்லியில் ஓடும் பஸ்ஸில் 23 வயதான பிசியோதெரப்பி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டார். சிகிச்சை பலனின்றி நிர்பயா உயிரிழந்தார். இந்த வழக்கில் முகேஷ் சிங் (32), பவன் குப்தா (25), வினய் ஷர்மா (26), அக்‌ஷய் குமார் சிங் (31) ஆகிய நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களுக்கு நாளை காலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

nirbhaya-mother

ஒரே நேரத்தில் நான்கு பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது இதுவே முதல் முறை. இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், “தூக்கு தண்டனை நிறைவேற்ற மீரட்டைச் சேர்ந்த பவன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த செவ்வாய்க் கிழமை இரவே திகார் சிறைக்கு வந்துவிட்டார். அதைத் தொடர்ந்து மாதிரி சோதனைகள் நடத்தப்பட்டன. டெல்லி திகார் சிறை கையேடு படி தண்டனை நிறைவேற்றப்பட உள்ள குற்றவாளிகளுக்கு கழுத்தில் மாட்டப்படும் கயிறு சரியாக உள்ளதா என்று முந்தைய நாள் சிறைத்துறை கண்காணிப்பாளர் ஆய்வு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் இன்று இறுதிக்கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 

nirbhaya-victims-87

குற்றவாளிகளின் எடையைவிட 1.5 மடங்கு அதிக எடை கொண்ட மாதிரி பொம்மைகள் தூக்கிலிடப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. தண்டனையானது சிறைச்சாலை கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், மருத்துவ அதிகாரி, மாவட்ட நீதிபதி முன்னிலையில் நடைபெற வேண்டும். பாதுகாப்புக்கு 10க்கும் குறையாத காவலர்கள், தலைமைக் காவலர்கள் அதற்கு இணையான துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் நிறுத்தப்பட வேண்டும். இவை அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாகவும், காலை 5.30 மணிக்கு குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.