காலை வாரிய மார்ச் காலாண்டு…. இண்டஸ்இந்த் வங்கியின் லாபம் ரூ.302 கோடியாக குறைந்தது…

 

காலை வாரிய மார்ச் காலாண்டு…. இண்டஸ்இந்த் வங்கியின் லாபம் ரூ.302 கோடியாக குறைந்தது…

கடந்த மார்ச் காலாண்டில் இண்டஸ்இந்த் வங்கியின் தனிப்பட்ட நிகர லாபம் ரூ.302 கோடியாக குறைந்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த சென்ற நிதியாண்டின் 4வது காலாண்டில் இண்டஸ்இந்த் வங்கியின்  தனிப்பட்ட  நிகர லாபம் ரூ.301.74 கோடியாக சரிவடைந்துள்ளது. ஈட்டியுள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 16 சதவீதம் குறைவாகும். அந்த காலாண்டில் (2019 ஜனவரி-மார்ச்) இண்டஸ்இந்த் வங்கியின் தனிப்பட்ட நிகர லாபம் ரூ.360.10 கோடியாக உயர்ந்து இருந்தது.

வருவாய்

மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் வங்கியான இண்டஸ்இந்த் வங்கி கடந்த மார்ச் காலாண்டில் தனிப்பட்ட மொத்த வருவாயாக ரூ.9,158.57 கோடி ஈட்டியுள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் இண்டஸ்இந்த் வங்கியின் தனிப்பட்ட மொத்த வருவாய் ரூ.7,550.43 கோடியாக இருந்தது.

இண்டஸ்இந்த் வங்கி

கடந்த மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, இண்டஸ்இந்த் வங்கியின் மொத்த வாராக் கடன் 2.45 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2019 மார்ச் 31 இறுதியில் மொத்த வாராக் கடன் 2.10 சதவீதமாக குறைந்து இருந்தது. அதேசமயம் இண்டஸ்இந்த் வங்கியின் நிகர வாராக் கடன் 0.91 சதவீதமாக குறைந்துள்ளது. 2019 மார்ச் இறுதியில் இண்டஸ்இந்த் வங்கியின் நிகர வாராக் கடன் 1.21 சதவீதமாக உயர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.