காலையிலேயே முதலீட்டாளர்கள் தலையில் இடியை போட்ட பங்குச் சந்தைகள்…..

 

காலையிலேயே முதலீட்டாளர்கள் தலையில் இடியை போட்ட பங்குச் சந்தைகள்…..

பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் தொடக்கமே முதலீட்டாளர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக அமைந்தது.

காலையிலேயே முதலீட்டாளர்கள் தலையில் இடியை போட்ட பங்குச் சந்தைகள்…..

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று காலையில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கியது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது.

வீழ்ச்சி

அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக போர் பதற்றத்தால் சீனாவின் பணமான யுவானின் மதிப்பு வர்த்தகத்தின் இடையே கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்தது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பும் ஆறரை மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்தது. ஆசிய பங்குச் சந்தைகளில் பங்கு வர்த்தகம் பலத்த அடி வாங்கியது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் வலுவாக எதிரொலித்தது.

இன்று காலையில் வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் டி.சி.எஸ். மற்றும் இன்போசிஸ் ஆகிய பங்குகளின் விலை மட்டுமே உயர்ந்தது. யெஸ் பேங்க், டாடா மோட்டார்ஸ், வேதாந்தா, ஸ்டேட் வங்கி உள்பட எஞ்சிய 28 நிறுவனங்களின் பங்குகளின் விலையும் குறைந்தது.

தற்போது காஷ்மீர் நிலவரமும் திகிலாக உள்ளதால், அதன் தாக்கமும் பங்குச் சந்தைகளில் எதிரொலிக்க வாய்ப்புள்ளது. இதனால் பங்குச் சந்தையில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.