காலில் விழுந்த மூதாட்டி… ஷாக்காகி ஓடிய ஸ்ரேயா கோஷல்!

 

காலில் விழுந்த மூதாட்டி… ஷாக்காகி ஓடிய ஸ்ரேயா கோஷல்!

இசை நிகழ்ச்சி ஒன்றில் மாலை அணிவிக்க வந்த மூதாட்டி ஒருவர் பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் காலில் விழுந்ததால் அதிர்ச்சியான அவர் பின்னோக்கி ஓடிச் சென்று பிறகு வந்து கட்டி அணைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இசை நிகழ்ச்சி ஒன்றில் மாலை அணிவிக்க வந்த மூதாட்டி ஒருவர் பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் காலில் விழுந்ததால் அதிர்ச்சியான அவர் பின்னோக்கி ஓடிச் சென்று பிறகு வந்து கட்டி அணைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழில் சில்லுனு ஒரு காதல் படத்தில் வரும் முன்பே வா, விருமாண்டி படத்தில் உன்னைவிட, விண்ணைத்தாண்டி வருவாயாவில் மன்னிப்பாயா உள்ளிட்ட பல ஹிட் பாடல்களைப் பாடியவர் பாலிவுட், பெங்காலி பாடகர் ஸ்ரேயா கோஷல். 

shreya-ghosal-01

சமீபத்தில் அவர் மேற்கு வங்கத்தில் நடந்த ஆன்மிக இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது மூதாட்டி ஒருவர் ஸ்ரேயா கோஷலுக்கு மாலை அணிவிக்க வந்தார். அதை அன்புடன் ஏற்றுக்கொண்டார் ஸ்ரேயா கோஷல். திடீரென்று அந்த மூதாட்டி, ஸ்ரேயாவின் காலில் விழப் போனார்… இதனால், அதிர்ச்சியடைந்த ஸ்ரேயா பின்னோக்கி நகர்ந்து அவரை தூக்க முயன்றார். பின்னர் எழுந்த அந்த மூதாட்டியை ஸ்ரேயா கோஷல் கட்டியணைத்தார். அவரை ஒரு சில நிமிடங்கள் கட்டியணைத்தபடி நின்றது பார்வையாளர்களை நெகிழச் செய்தது. அனைவரும் கைதட்டி வாழ்த்துக் கூறினர். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.