காலியாகும் அமமுக கூடாரம்… ரணகளத்தில் டி.டி.வி.தினகரன்..!

 

காலியாகும் அமமுக கூடாரம்…  ரணகளத்தில் டி.டி.வி.தினகரன்..!

அடுத்தடுத்து அணி மாற அமமுக நிர்வாகிகள் தயாராகி வருவதை அறிந்து கொண்ட டி.டி.வி அவர்களை கட்டுப்படுத்த எந்த உறுதியையும் அளிக்க காரணமின்றி தவித்து வருகிறார்.

தேர்தல் முடிவுகள் வெளியான இரண்டே நாட்களில் அமமுக கழக அமைப்புச் செயலாளரும், தென் மண்டல பொறுப்பாளருமான திருநெல்வேலி மாவட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.ஆதித்தன் அக்கட்சியிலிருந்து விலகி மீண்டும் அதிமுகவில் தன்னை அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டுள்ளார். இது டி.டி.வி.தினகரன் தரப்பை அதிர வைத்திருக்கிறது.ttv

நாடாளுமன்ற தேர்தலில் அமமுக  ஒரு சீட் அல்லது சட்டசபை தேர்தலில் ஒரு சீட் வெற்றி பெற்று இருந்தால்கூட கட்சியில் பூகம்பம் வெடித்து இருக்காது. ஆனால்  வெற்றி பெறாதது மட்டுமில்லாது டெபாசிட்டும் பறிபோனது. இன்னும் 2 ஆண்டுகளுக்கு தோற்றுப்போன கட்சியின் தலையின் கீழ் இனிமேலும் இருந்தால் வருவாய் போகும். பிரச்னைகள் வந்தால் சிறைக்கு போக வேண்டி வரும் என நினைக்கிறார்கள்.  அதனால் தங்களுக்கு தோதான கட்சிகளில் இணைய முடிவு செய்து இருக்கிறார்களாம் அக்கட்சி நிர்வாகிகள். 

ttv dhinakaran

காரணம் என்ன என்று விசாரித்தால், நான்கு சுவர் போன்று சில நிர்வாகிகள் மட்டுமே டி.டி.வி.தினகரனை சூழ்ந்து கொண்டு ’’தலைவா நாமதான் ஜெயிப்போம்.  ஆட்சி நம்மிடம்தான் எனச் சொல்லி உசுப்பேற்றியே டி.டி.வி.யை தோற்கடித்து விட்டார்கள் என்று ஒரு தரப்பும், தொண்டர்களிடம் அவரின் நெருக்கம் சொல்லிகொள்ளும்படி இல்லை என்று மற்றொரு தரப்பும் குற்றம்சாட்டுகிறார்கள்.  இப்படி  குற்றம்சாட்டும் நபர்கள் எல்லாம் வேறு கட்சியில் இணைய மனு போட்டவர்களாம். இதில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் முதலிடத்தில் இருப்பது இன்னொரு சுவாரஸ்யமான தகவல்.ttv

அடுத்தடுத்து அணி மாற அமமுக நிர்வாகிகள் தயாராகி வருவதை அறிந்து கொண்ட டி.டி.வி அவர்களை கட்டுப்படுத்த எந்த உறுதியையும் அளிக்க காரணமின்றி தவித்து வருகிறார். இன்னும் சில மாதங்களில் அமமுக கூடாரம் காலியாகலாம் எனக்கூறப்படுகிறது.